டாப் 10 நியூஸ் : சுங்க கட்டணம் உயர்வு முதல் டி20 உலகக்கோப்பை வரை!

Published On:

| By christopher

அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலை அடுத்து இன்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் சரண்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான இடைக்கால ஜாமீன் மீதான வழக்கு ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று மதியம் 2 மணிக்கு திகார் ஜெயிலில் சரணடைய உள்ளார்.

சுங்க கட்டணம் உயர்வு!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாகவும், ரூ.5 முதல் 20வரை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடக்கம்!

9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் ஆட்டத்தில் மோதும் அமெரிக்கா

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா கனடா மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.

கோடை விடுமுறை முடிவு!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கான மே மாதம் கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது.

கன மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இளையராஜா பிறந்தநாள்!

இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன் முகம் கொண்ட இசைஞானி இளையராஜா இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தேசிய புற்றுநோயிலிருந்து தப்பியவர்கள் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தேசிய புற்றுநோயிலிருந்து தப்பியவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று  இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் 77வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.75க்கும், டீசல் விலை லிட்டருக்கு 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: மாம்பழம்…. யார்… யார், எந்த அளவு, எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?

மூன்று நாள் தியானத்தை நிறைவு செய்தார் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share