பிரதமர் மோடி தனது மூன்று நாள் தியானத்தை நேற்று (ஜூன் 1) நிறைவு செய்தார்.
விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கடந்த மே 30-ஆம் தேதி கன்னியாகுமரி வந்தார்.
பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மோடி, பின்னர் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.
முதல் நாள் தியானத்தை நிறைவு செய்த பிறகு அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த தனி அறையில் ஓய்வெடுத்தார். பின்னர் இரண்டாவது நாள் மே 31-ஆம் தேதி அதிகாலையில் சூரிய வழிபாடு நடத்திவிட்டு, மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் நேற்று மூன்றாவது நாளாக தியானத்தில் ஈடுபட்ட மோடி, மாலை 3 மணியளவில் தனது தியானத்தை நிறைவு செய்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருவள்ளுவர் சிலையை பார்வையிட சென்றார். அங்கு உயர்ந்து நின்ற திருவள்ளுவருக்கு மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் படகு மூலம் கரைக்கு வந்த மோடி, தனது கான்வாய் வாகனம் மூலம் ஹெலிபேட் தளத்திற்கு சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுக்கெல்லாம் அழுகையா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் குதிரை வேட்டை…. ‘இந்தியா’ கூட்டத்தில் ஸ்டாலின் சொன்னது என்ன?