TNAssembly : காவல்துறைக்கு 100 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்

Published On:

| By christopher

TNAssembly : Stalin issued 100 notices to police and fire department

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (ஜூன் 29) நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு  பதிலுரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றில் முக்கிய அறிவிப்புகள் சில,

????கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

????பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

????கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

????கோவை பொள்ளாச்சி, திருப்பூர் நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

????கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 2 அலகுகள் உருவாக்கப்படும்.

????பள்ளி வளாகம் அருகே விபத்துகளை தவிர்க்க ரூ.1கோடியில் பாதுகாப்பு மண்டலங்கள் ஏற்பாடு.

????சென்னையில் பெண்களுக்காக பாதுகாப்பான நகரம் தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

????தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

????ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களில் புதிய சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உருவாக்கப்படும்.

????ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக Q காவல் பிரிவு ஏற்படுத்தப்படும்.

????பொன்னேரி காவல் சரகம் உருவாக்கப்படும்

????காவல்துறை தலைமை இயக்குநரிடம் கருத்துரு பெற்று விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்த காவலர்களுக்கு தேர்தல் பணிப்படி வழங்கப்படும்.

???? ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

????கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

????தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

????தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும்.

????ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.

????சமயபுரம், மேடவாக்கம். பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம். கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

????அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.

????புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும். தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்” என பல்வேறு அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக நாடகம்” : ஸ்டாலின் குற்றச்சாட்டு

”மக்களவை தேர்தல் என்றாலும் எதிர்க்கட்சிகள் என்னை தான் குறி வைத்தனர்” : ஸ்டாலின்

INDvsSA : தோனி மாதிரி கோலிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு இருக்கு!

”விக்கிரவாண்டியில் பணம் வெல்லாது” : டாக்டர் ராமதாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share