கொலை மிரட்டல், அந்தரங்க வீடியோ, கிணறு அபகரிப்பு.. அமைச்சர் ஜெகதீஸ்வரியை சுற்றும் சர்ச்சைகள்!

Published On:

| By Mathi

TN Minister Jagadeshwari in a Whirlwind of Controversies

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது அவரது சொந்த ஊர் மக்களே பகீர் புகார் கொடுத்துள்ளனர்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள பனைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது அந்த ஊரின் பொது கிணற்றை அமைச்சர் ஜெகதீஸ்வரி அபகரித்துக் கொண்டார் என சொந்த ஊர் மக்களே புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அமைச்சர் ஜெகதீஸ்வரி தரப்போ, “அமைச்சரின் மூதாதையர் ஊருக்கு தானமாக கொடுத்ததுதான் கிணறு. இப்போது அந்த கிணற்றுக்கும் வேலி போடப்பட்டுள்ளது” என்கின்றனர்.

ADVERTISEMENT

அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சைகளில் சிக்குவது இது புதியதும் அல்ல.. தமிழக அமைச்சர்களிலேயே அதிகமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருப்பது அமைச்சர் ஜெகதீஸ்வரிதான்.

என்ன படிப்பு படித்தார்?

அமைச்சர் ஜெகதீஸ்வரி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தமது படிப்பு- B.Sc. From Sree Ramalinga Academy Of Higher Education (Autonomous) in 2018 என தெரிவித்துள்ளார். மேலும் தொழில்: News Editor எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அமைச்சர் ஜெகதீஸ்வரி, படித்ததாக சொல்லப்படும் கல்வி நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது என அதன் இணைய தள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Sree Ramalinga Academy Of Higher Education (Autonomous) SREE RAMALINGA ACADEMY OF HIGHER EDUCATION, 11/46B, Pillaichavadi, Puducherry – 605 014, INDIA இதன் தொடர்பு எண் 0413-2988988 என கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண் அவுட் ஆப் சர்வீஸ்-ல் உள்ளது. இன்னொரு எண் இணையத்தில் உள்ளது. 91 7845243526 இந்த எண்ணுக்கு இன்கமிங் வசதி இல்லை என வருகிறது.) இந்த கல்வி நிறுவனத்தின் பெயரிலான இணையதள முகவரி http://www.srla.co.in/ இதில் கொடுக்கப்பட்டுள்ள 91 98765 43210 என்ற எண்ணும் உபயோகத்தில் இல்லை. இந்த கல்வி நிறுவனம் SEED TRUST என்ற அமைப்பினால் இயக்கப்படுவதாகவும் மேலே உள்ள இணையத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் SEED TRUST புதுச்சேரி தொடர்பான விவரங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.)

DR. ஜெகதீஸ்வரி?

அமைச்சரின் ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/share/18VfPckMLm) அமைச்சர் தம்மை Dr.ஜெகதீஸ்வரி என குறிப்பிட்டு விளம்பர பதாகைகளை பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், BSC படித்தவர் எப்படி டாக்டர் ஆக முடியும்? BSC (Journalism) என ஒரு கோர்ஸ் உள்ளதா? ஒருவேளை அமைச்சர் ஜெகதீஸ்வரி பிசியோ தெரபி கோர்ஸ் படித்திருந்தால் Dr. என எம்பிபிஎஸ் மருத்துவம் படித்தவர் போல போட்டுக் கொள்ள முடியுமா? எனவும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வந்தனர்.

நானே சீனியர்.. அமைச்சருடன் மோதல்

இந்த விமர்சனங்களுக்கு நடுவே சக அமைச்சரான கீர்த்தனாவைவிட தாம் சீனியர் என்பதால் தம்முடைய பெயரைத்தான் பேனரில் முதலில் போட வேண்டும் என அரசு விழாவில் அதிகாரிகளை பொதுமக்கள் முன்னிலையிலேயே அமைச்சர் ஜெகதீஸ்வரி கடிந்து கொண்ட வீடியோசோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது, நானும் அமைச்சர் கீர்த்தனாவும் ‘உடன்பிறவா சகோதரிகள்’ என பொது மேடைகளில் பேசி வருகிறார்.

கொலை மிரட்டல் ஆடியோ

இதனைத் தொடர்ந்து, தவெக நிர்வாகி ஒருவரை, ”என்னை ஆரம்பத்தில் இருந்து ரொம்ப சீண்டிகிட்டு இருக்கிறாப்ல.. ஏற்கனவே பொதுச்செயலாளர் (புஸ்ஸி ஆனந்த்) 5,6 மாசத்துக்கு முன்னாடி திட்டுனாரு.. திரும்ப திரும்ப என்ன செஞ்சுகிட்டு இருக்கிறாப்ள.. என்னை பார்த்தா எப்படி தெரியுது? என் தொகுதிக்குள்ள அந்த பயன் வர்றதுக்கு யார் அதிகாரம் கொடுத்தா? நான் ஒன்னுமே செய்யமாட்டேன்.. தூக்கி வெச்சு ஜட்டியோ அடிச்சு கொன்னு எடுத்துடுவேன்..ரிப்போர்ட்டரா இருக்கும்போதே.. என்னை பார்த்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?” என அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டும் ஆடியோவும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

’அந்தரங்க உல்லாச வாழ்க்கை’ வீடியோ

இதன் உச்சமாக, பெண் ஒருவர் அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் பேசியதாக அல்லது அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு அனுப்பியதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதில், “உன் மேட்டர் திமுகவுக்கு கசிந்ததுன்னு வைச்சுக்கோ லட்டு மாதிரி தூக்கிடுவாங்க.. நீங்க என்ன சொன்னீங்க.. என்னை பார்த்து பேசுறேன்.. உங்ககிட்ட நிறைய விஷயம் பெர்சனலா பேசனும்னு சொன்னீங்க.. ஆனா பெர்சனலா பேசவே இல்லை..

ஆனால் இரவு நேரங்களில், தனிப்பட்ட நபர்களுடன் உல்லாசமாக பேசுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது. அந்த உல்லாசப் பேச்சுகள், அந்த உல்லாச வாழ்க்கையோட அவலங்களை எடுத்துக்காட்டி நான் வெளியில் போடுகிற நேரம் எனக்கு வரும்.

நான் மீடியாவில் எல்லாம் போட்டு உங்களை அசிங்கப்படுத்தமாட்டேன். ஏன்னா, என்னை அசிங்கப்படுத்தனப்ப என்ன கஷ்டப்பட்டேன்னு அந்த வலிகள் எனக்கு தெரியும். டைரக்டா, விஜய் அவர்களுக்கே உங்கள் வீடியோஸ் அனுப்பி விடுவேன். அப்ப உன் அந்தரங்க விஷயம் வெளியில வந்துவிடும். என்னை அரெஸ்ட் பண்ணினா உன் அந்தரங்க விஷயம் வெளியே வரும். அந்தரங்கத்துல யார் யார் இருக்கிறாங்கன்னு முக்கிய நிகழ்வுகளை நான் பச்சையா போட்டு உடைப்பேன். அப்ப நீ மாட்டிக் கொள்வ.. உன் பதவியே பறிக்கப்படலாம். இது மிரட்டல் அல்ல. இது உண்மையின் வெளிப்பாடு” என இடம் பெற்றுள்ளது.

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் விளக்கங்கள்

இது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, “என் வீடியோ இருப்பதாக சொல்லி சிலர் என்னை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர்; தேவையானால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைகள் பற்றி சில நாட்களுக்கு முன்னர் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, “சமூக வலைதளங்களில் 90 சதவீதம் பொய்யான தகவல்கள் பரப்பிவிடுகின்றனர்; உண்மை அறியாமல் இந்த செய்திகளை யாரும் பகிர வேண்டாம். எதிர்க்கட்சியின் சூழ்ச்சியால் தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். இதனால் மக்களை சந்திக்க வர முடியவில்லை” என கூறியிருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவேதான் இப்போது, “ ஊர் கிணற்றை அபகரித்துக் கொண்டார் அமைச்சர் ஜெகதீஸ்வரி” என சொந்த ஊர் மக்களே போர்க்கொடி தூக்கி இருக்கும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share