வைஃபை ஆன் செய்ததும், “வெற்றி கொட்டு மழையே, விழும் விண்மீன் வலையே” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. திடீர்னு “வெற்றி வெற்றி” முழக்கம்..
நாம பேசப் போறது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை (Prashant Kishor) பத்தி.. பீகார் பங்கிப்பூர் தொகுதியில பை எலக்ஷன் நடந்துச்சு.. இன்னைக்கு காலையில கவுண்ட்டிங் தொடங்குனது முதலே பிகே என்கிற பிரசாந்த் கிஷோர்தான் செம்ம லீடிங்..

பாஜகவோட தேசியத் தலைவரான பங்கிப்பூர் எம்.எல்.ஏ.வா 5 முறை ஜெயிச்ச நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டாரு.. அவரு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு ராஜ்யசபா எம்.பியானாரு.. நிதின் நபின் ராஜினாமா செஞ்சதால நடந்த இடைத்தேர்தல்தான் இது.. இப்ப பங்கிப்பூர் தொகுதியில பிரசாந்த் கிஷோர் ஜெயிச்சிருக்கிறது பாஜகவை ரொம்பவே அதிர்ச்சி அடைய வெச்சிருக்கு..
பார்ட்டியோட நேஷன் பிரஸிடண்ட் தொகுதியிலேயே செம்ம அடின்னா இது ரொம்பவே அபாயகரமான முன்னெச்சரிக்கைன்னுதான் பாஜக லீடர்ஸ் சொல்றாங்க..
சரி.. பிரசாந்த் கிஷோர் எப்படிதான் ஜெயிச்சாருன்னு பீகார் ரிப்போர்ட்டர்ஸ்கிட்ட நாம பேசுனப்ப, “பொதுவாக பீகார் தேர்தல்களில்ல ஜாதி கால்குலேஷன் ரொம்பவே முக்கியமா இருக்கும். சோ கால்ட் உயர்ஜாதி எல்லாம் பாஜக ஓட்டு; தலித்- முஸ்லிம்கள் எல்லாம் ஆர்ஜேடி ஓட்டு; பிசி ஓட்டு எல்லாம் நிதிஷின் ஜேடியூ ஓட்டுன்னு ஒரு ரெடிமேட் கால்குலேஷன் இருக்கும்..

இதைத்தான் பாஜகவும் ஆர்ஜேடியும் இந்த முறையும் நம்பி களத்துக்கு போனாங்க..
ஆனா பிரசாந்த் கிஷோர் வேற மாதிரி ‘ஸ்கெட்ச்’ போட்டார்.. இத்தனைக்கும் பிகே, பிராமணர்தான்.. அதுக்காக தன்னை உயர்ஜாதின்னும் சொல்லிக்கலை.. இன்னும் சொன்னா பிகே ஜாதி ஓட்டுகளை பத்தியே பேசலை..
அவரு அதிகமாக பேசுனது பீகார் மக்களைப் பத்தி.. குறிப்பாக பீகாரை விட்டு தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரான்னு பிற மாநிலங்களில்ல பீகாரிகள் வேலை செய்யுறதை பத்தி ரொம்பவே பேசுனாரு..
”பீகாரைச் சேர்ந்த கோடிக்கணக்கான குழந்தைகள் ரூ.10,000த்துக்கும் ரூ.15,000-க்கும் ஊதியத்திற்காக மும்பை, டெல்லி, சென்னையில கொத்தடிமை மாதிரி வேலை செய்யுறதுக்காக நாம இங்கே ஓட்டு போட்டு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறோம்”னு கொந்தளிச்சார் பிரசாந்த் கிஷோர்..
அதோட, ”பீகார் மக்கள் என கூலி வேலை செய்யத்தான் பிறந்தவங்களா? எதுக்காக பீகார் பிள்ளைகள் மட்டும் இப்படி மாநிலம் விட்டு மாநிலம் போய் நாசமாக போகனும்? ஏன் குஜராத் மக்களுக்கு கிடைக்கிற அனைத்து வசதிகளும் நம்ம பீகார் மக்களுக்கு கிடைக்கலை”ன்னும் பிரசாரத்துல தொடர்ந்து கேள்வி கேட்டார் பிகே
ரொம்பவே முக்கியமா, ”ஒரு எம்.எல்.ஏ.வாக நான் ஜெயிச்சதாலேயே பங்கிப்பூர் பெங்களூரு ஆகிடாது.. ஆனா தொடர்ந்து மாற்றங்களை கொடுக்கனும்”னு வெளிப்படையாகவே பேசினார்.
பங்கிப்பூரில 30 வருஷமா பாஜக ஜெயிச்சும் எங்களுக்கு ஒன்னும் நடக்கலைன்னு அந்த தொகுதி மக்கள் வெறுப்பில இருந்தாங்க.. அந்த வெறுப்போட பல்ஸை பிடிச்சுட்டாரு பிகே.. அதனால வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வெளி மாநிலத்துக்கு வேலை தேடி போற அவலம்னு டச்சிங்கான விஷயங்களை கையிலெடுத்தாரு..
அதே மாதிரி இந்த எலக்ஷன்ல தன்னோட ஜன்சுராஜ் கட்சியின் செகண்ட் லெவல் லீடர்ஸை இறக்காம தானே களத்துல இறங்குனாரு.. இது எல்லாமே நல்லாவே ஒர்க் அவுட் ஆகிடுச்சு.. அதனால்தான் பாஜகவுக்கு செம்ம செட்பேக்.. பிரசாந்த் கிஷோர் ஜெயிச்சது, எப்பவுமே நாமதான் ஜெயிப்போம்னு நினைச்ச திமுக -அதிமுகவுக்கு கிடைச்ச அடி மாதிரி இங்கே பாஜகவுக்கு விழுந்துருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
