அமைச்சர் கீர்த்தனா பெயரை பார்த்து காட்டமான அமைச்சர் ஜெகதீஸ்வரி – நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

keerthana

விருதுநகரில் இன்று (ஜூன் 26) காலை விளையாட்டுத்துறை சார்பில் சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் சுகபுத்திரா செய்து வந்தார்.

இந்த விழா பேனரில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலாவதாகவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

விழாவில் பங்கேற்க மேடைக்கு வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, பேனரில் தன் பெயர் இரண்டாவதாக இருப்பதைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். விழா ஏற்பாடுகளைச் செய்திருந்த மாவட்ட கலெக்டர் சுகபுத்ராவிடம் இதுகுறித்து மேடையிலேயே அவர் கேள்வி எழுப்பினார்.

“பொதுவாக ஒரு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் யாரோ, அவர் பெயரைத்தான் முதலில் போட வேண்டும். இந்த மாவட்டத்திற்கு நான் தான் பொறுப்பு அமைச்சர். அப்படி இருக்கும்போது என்னுடைய பெயர் தானே பேனரில் முதலில் இருக்க வேண்டும்? ஏன் அமைச்சர் கீர்த்தனா பெயரை முதலில் வைத்தீர்கள்?” என்று கலெக்டரிடம் நேரடியாகக் கேட்டார்.

ADVERTISEMENT

மேலும், “மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் எனக்குத்தான் முதலில் மரியாதை கொடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். அமைச்சரின் இந்த அதிரடி கேள்வியால் விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share