போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! அரசு பணி நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு உயர்வு.. விஜய் அதிரடி உத்தரவு!

By Mathi

|

Published on 30 Oct 2026, 3:41 PM

TN Govt Jobs-Vijay

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்தில் பொதுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (அக். 30) வெளியிட்ட செய்திக் குறிப்பில், போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பைத் தற்போது உள்ளதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பு உயர்வானது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கெனவே உள்ள வயதுச் சலுகைகளுடன் கூடுதலாக அமையும்.

ADVERTISEMENT

யாருக்கு எவ்வளவு வயது வரம்பு?

குரூப் 1 தேர்வு

  • பொதுப் பிரிவினர்: 32-லிருந்து 37 வயது
  • இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: 37-லிருந்து 42 வயது
  • மாற்றுத்திறனாளிகள் (பொதுப் பிரிவு): 42-லிருந்து 47 வயது
  • மாற்றுத்திறனாளிகள் (இடஒதுக்கீட்டுப் பிரிவு): 47-லிருந்து 52 வயது

குரூப் 2 மற்றும் 2A தேர்வு

ADVERTISEMENT
  • பொதுப் பிரிவினர்: 30-லிருந்து 35 வயது
  • இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: உச்ச வயது வரம்பில்லை
  • மாற்றுத்திறனாளிகள் (பொதுப் பிரிவு): 40-லிருந்து 45 வயது
  • மாற்றுத்திறனாளிகள் (இடஒதுக்கீட்டுப் பிரிவு): உச்ச வயது வரம்பில்லை

குரூப் 4 தேர்வு

  • பொதுப் பிரிவினர்: 30-லிருந்து 35 வயது
  • உயர்கல்வித் தகுதி இல்லாத இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: 32-லிருந்து 37 வயது
  • உயர்கல்வித் தகுதி இல்லாத SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள்: 35-லிருந்து 40 வயது
  • மாற்றுத்திறனாளிகள் (பொதுப் பிரிவு): 40-லிருந்து 45 வயது
  • உயர்கல்வித் தகுதி இல்லாத மாற்றுத்திறனாளிகள் (இடஒதுக்கீட்டுப் பிரிவு): 42-லிருந்து 47 வயது
  • உயர்கல்வித் தகுதி இல்லாத மாற்றுத்திறனாளிகள் (SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள்): 45-லிருந்து 50 வயது
  • உயர்கல்வித் தகுதி உள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: உச்ச வயது வரம்பில்லை

இந்த உத்தரவு எப்போது முதல் அமல்?

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (அக். 30) முதல் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

ADVERTISEMENT

தமிழக அரசின் இந்த உத்தரவால், வயது வரம்பு முடிவடையும் நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel