TAPS அமல்படுத்த எதிர்ப்பு: விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கம் 2 கட்ட போராட்டம்!

Published On:

| By Mathi

TN Govt. Employees

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாத முதல்வர் விஜய் அரசுக்கு எதிராக 2 கட்ட போராட்டங்களை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக நேற்று (ஆகஸ்ட் 19) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் தலைமை ஏற்றார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

ADVERTISEMENT

1) சட்டமன்றத்தில் ஓய்வூதியம் தொடர்பாக நிதியமைச்சரின் அறிவிப்பு
அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது.

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட TAPS திட்டம் ஒழிக்கப்பட்டு,
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, TAPS திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன், அறிவித்ததற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

2) தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, TAPS திட்டத்தை அமுல்படுத்த முயற்சி செய்யும் தவெக அரசை கண்டித்தும் தேர்தல் வாக்குறுபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக்கோரியும்

அ) 27.8.26 அன்று மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்

ADVERTISEMENT

ஆ) 7.9.26 அன்று சென்னையில் உண்ணாவிரதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share