தமிழ்நாடு முழுவதும் போலீசார் மீது புகார் கொடுக்க மொபைல் எண்கள் அறிவிப்பு – முழு லிஸ்ட்!

Published On:

| By Mathi

Complaint against Police- Mobile and WhatsApp Numbers Across Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் போலீசார் மீதான ஊழல் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க மாவட்டம், மாநகர காவல் ஆணையரங்களின் மொபை-வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக காவல்துறை தலைவரின் அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம்.

பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்க மொபைல் எண்கள்

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share