VIDEO: சென்னையில் பயங்கரம்- அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!

Published On:

| By Mathi

Group Clash in Chennai – Public Flees in Panic

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே இரு குழுக்கள் கத்தி, அரிவாள்களுடன் மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை, தங்கசாலை மேம்பாலம் அருகில் உள்ள நகர்ப்புற வாழ்வு குடியிருப்பு பகுதியில் இருதரப்பினர் திடீரென கத்தி, அரிவாள்களுடன் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த மோதலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இம்மோதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share