தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் ரூ.9,450 கோடி மதிப்பிலான 4 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று (ஆகஸ்ட் 19) ஒப்புதல் அளித்துள்ளது.
- கும்மிடிப்பூண்டி-கூடூர் 3-வது, 4-வது வழித்தடம்-90 கிலோ மீட்டர் (ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு)
- காரக்பூர்-பத்ராக் (ராணிடால்) 4-வது வழித்தடம்-173 கிலோ மீட்டர் (மேற்கு வங்கம், ஒடிசா)
- பத்ராக்-ஹரிதாஸ்பூர் 4-வது வழித்தடம்-75 கிலோ மீட்டர் (ஒடிசா)
- கட்டாக்-பாரதீப் (படபந்தா) 3-வது, 4-வது வழித்தடம்-72 கிலோ மீட்டர் (ஒடிசா) ஆகிய இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை 2030-31-ம் ஆண்டிற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் 8 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படவுள்ள இந்த 4 திட்டங்களால் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 410 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும். இந்தப் பல்தடத் திட்டங்கள் சுமார் 60 லட்சம் பேர் வசிக்கும் 6,448 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.
இத்திட்டங்களால்
- குல்திஹா வனவிலங்கு சரணாலயம்
- பிட்டார்கனிகா தேசியப் பூங்கா
- மா பத்ரக்காளி கோவில்
- மா தமாரைக் கோவில்
- பஞ்சலிங்கேஸ்வர் கோவில்
- தல்சாரி-உதய்பூர்
- சந்திப்பூர் கடற்கரை
- பழவேற்காடு ஏரி
- நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்
- பகவான் வீரராகவ பெருமாள் கோவில்
- கடா குஜங்கா ஜகன்நாதர் கோவில்
- சரளா கோவில்
- தபாலேஸ்வர் கோவில்
- லலித்கிரி (புத்த தலம்) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி மேம்படும்.
