தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான TAPS ஓய்வூதியத் திட்டம் எப்போது முழுமையாக அமலுக்கு வரும் என சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் ஆசிரியர்களின் ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு ரூ.14,000 கோடி அளவில் குறைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க ’உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’- TAPS ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தினோம். தற்போதைய அரசு, நிதிநிலை அறிக்கையில் ரூ.11,000 கோடி முழுமையாக ரத்து செய்துவிட்டது. இதில் மேலும் ரூ. 3000 கோடி அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் உண்டா? TAPS ஓய்வூதிய திட்டம் உண்டா? இதற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் அளித்த பதில்: TAPS பத்தி கேட்டிருந்தாங்க. Tamil Nadu Assured Pension Scheme, அதைப்பத்தி என்ன ஆச்சு? இந்த ரூ.11,000 கோடி நீங்க இன்குளூட் ஆகலையே? அப்படின்னு கேட்டிருந்தாங்க.
அது ஆக்சுவலா, லாஸ்ட் டி.எம்.கே கவர்மெண்ட்ல அவங்க ஒரு கமிட்டி ஹெட் பண்ணிருந்தாங்க, ரெக்கமெண்ட் பண்ணிருந்தாங்க. இந்த கமிட்டி ரெக்கமெண்ட் பண்ணது வந்து, ஹெட் பை ககன் தீப் சிங் பேடி அவர்கள், ஐ.ஏ.எஸ். அந்த பென்ஷன் கமிட்டி ஹெட் பண்ணது அவங்கதான். அவங்க ரெக்கமெண்ட் கொடுத்துட்டு போயிருக்காங்க. என்ன ரெக்கமெண்ட் பண்ணிருக்காங்கன்னா, அந்த TAPS வந்து, Can be implemented only when the fund, அந்த நிதி என்றது Government of India கிட்ட இருந்து அவங்க extra borrowing கொடுத்திருந்தாங்கன்னா, கண்டிப்பா நம்ம இம்ப்ளிமெண்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க.
அதுவரைக்கும் அந்த ரிட்டயர்மெண்ட் ஆனவங்க, 1-1-2026, அதுக்கப்புறம் on or after 1-1-2026 வரைக்கும், interim relief கொஞ்சம் கொடுக்கலாம்னு சொல்லிட்டு, interim pay out கொஞ்சம் ரெடி பண்ணி இருக்கிறோம். அதுக்குரிய சீக்கிரத்துல நம்ம அட்ரஸ் பண்ணுவோம்.
Once இந்த Government of India extra borrowing பண்றதுக்கு அலோவ் பண்ணாங்கன்னா, த்ரூ TAPS கம்பல்சரி நம்ம இம்ப்ளிமெண்ட் பண்ற வாய்ப்பு இருக்கு. அதுக்குரிய விரைவுல, in case, இந்த august house-ல நான் இன்பார்ம் பண்றது வந்து என்னன்னா, அக்ரி பண்ணிட்டாங்கன்னா, வரப்போற சப்ளிமெண்டரி பட்ஜெட்ல கண்டிப்பா இந்த TAPS-ஐ வந்து இம்ப்ளிமெண்ட் பண்ண கொஞ்சம் வாய்ப்பு இருக்கு. இவ்வாறு அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
