அரசு ஊழியர்களுக்கு TAPS ஓய்வூதிய திட்டம் தொடருகிறதா? இல்லையா? திமுக கேள்வி

Published On:

| By Mathi

DMK Questions on TAPS Pension Scheme for Govt. Employees

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட TAPS ஓய்வூதிய திட்டம் தொடருகிறதா? இல்லையா? என்ற குழப்பத்துக்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 10-ந் தேதி திமுகவின் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் ஆசிரியர்களின் ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு ரூ.14,000 கோடி அளவில் குறைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க ’உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’- TAPS ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தினோம். தற்போதைய அரசு, நிதிநிலை அறிக்கையில் ரூ.11,000 கோடி முழுமையாக ரத்து செய்துவிட்டது. இதில் மேலும் ரூ. 3000 கோடி அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் உண்டா? TAPS ஓய்வூதிய திட்டம் உண்டா? இதற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share