அரசு ஊழியர் ஓய்வூதியம் – 30% இடைக்கால நிவாரணம்.. TAPS அரசாணை 111… யார் யாருக்கு பொருந்தும்?

Published On:

| By Mathi

Eligibility for Interim Relief under TAPS for TN Govt. Employees

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான TAPS ஓய்வூதிய திட்ட விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை 111

ADVERTISEMENT

இந்த அரசாணையில், ”குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியை முடித்து, 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வயது முதிர்வு பெற்று ஓய்வு பெறும் ஒவ்வொரு தகுதியுள்ள அரசு ஊழியரும், TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை வாழ்வாதாரத்திற்கான மாதாந்திர இடைக்கால நிவாரணத்தை பெறத் தேர்வு செய்யலாம்.

இந்த இடைக்கால நிதியுதவியைப் பெற விரும்புவோர், இந்த அரசாணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து (16.06.2026) 60 நாட்களுக்குள் குறிப்பிட்ட படிவத்தில் (Form I/II) தங்களது விருப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசு வெளியிட்டுள்ள TAPS அரசாணை 111 யார் யாருக்கு பொருந்தும்?

  • CPSல் பணியேற்று 01.01.26க்குப் பின் ஓய்வு பெற்றவர்கள்
  • 01.01.26-க்குப் பின் ஓய்வு பெற்றும் பணப்பலன்கள் பெறாமலேயே இறந்தவர்கள்
  • TAPS விதிமுறைகள் வெளியாகி நடைமுறைக்கு வரும் வரை ஓய்வு பெற இருப்பவர்கள்
  • ஓய்வுக்கு முன்னரே இறக்க நேரிடுவோர்

ஆகியோருக்கு TAPS அரசாணை 111 பொருந்தும் என்கின்றனர் ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கத்தினர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share