பி.ஆர்.சுந்தரை காவலில் வைக்க நீதிபதி மறுப்பு!

Published On:

| By Kavi

பெண் செய்தி வாசிப்பாளருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பி.ஆர்.சுந்தரை காவலில் வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பெண் செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசியை நேற்று பெங்களூருவில் வைத்து சென்னை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

பின்னர் சென்னை அழைத்து வரப்பட்ட அவர்கள் நேற்றிரவு சைதாப்பேட்டை 18 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

பிஆர் சுந்தர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி, ”கைதுக்கான நடைமுறைகள் மீறப்பட்டுள்ளது என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கைது செய்யப்பட்டுள்ளார், அவரை காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது” என்றும் வாதங்களை முன்வைத்தார்.

ADVERTISEMENT

அவரது மனைவி மீதான குற்றத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி செந்தில், இருவரையும் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து நேற்றிரவே இருவரும் வீடு திரும்பினர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share