சென்னையில் கொட்டிய கனமழை- விமான சேவைகள் பாதிப்பு!

Published On:

| By Mathi

Heavy Rains Batter Chennai, Impacting Flight Services

சென்னை மாநகரில் கனமழை பெய்து வரும் நிலையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி மாலை சேப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, பூவிருந்தவில்லி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டியது.

ADVERTISEMENT

சென்னை விமான நிலைய பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்தெடுத்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

மேலும் சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவைகளும் தாமதாகின. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்வதாக வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share