ஜெம் வீரமணி வழக்கு… மேலும் ஒருவர் கைது : யார் இவர்?

Published On:

| By Kavi

கிரானைட்ஸ் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரானைட்ஸ் தொழிலதிபரான ஜென் வீரமணி, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அவரது கூட்டாளிகளான சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டும் இதன் மீது, நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஆனது என்ற கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தினர் முந்தைய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த சூழலில் போலீசார் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோருக்கு தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்துள்ளனர்.

இதில் சில முக்கிய ஆவணங்கள் புகைப்படங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

இந்த சூழலில் ஜெம் வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வீரமணியிடம் வேலை பார்த்து வந்தவர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக இந்த வழக்கில் எந்த ஒரு நபரையும் விட்டுவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்க்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share