“உங்க Oath-ல அது இல்ல!” – பதவியேற்பின் போது காங்கிரஸ் அமைச்சரை மேடையிலேயே தடுத்த ஆளுநர்- என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Congress Minister Governor Arlekar

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை (Minister) இன்று மே 21-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதனும் அடங்குவார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் (Governor Arlekar) பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

59 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

கண்டித்த ஆளுநர் அர்லேகர் (Governor Arlekar)

காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவரும் கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் பதவி பிரமாணத்தை வாசி முடித்த உடன், “பெருந்தலைவர் காமராஜர் நாமம் வாழ்க”! “பாரத ரத்னா ராஜீவ் காந்தி நாமம் வாழ்க”! “மக்கள் தலைவர் ராகுல் காந்தி வாழ்க”! என கைகளை உயர்த்தி முழக்கமிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஆளுநர் அர்லேகர் மைக்கிலேயே, ”That is Not a Part of Your Oath” என பகிரங்கமாக கண்டித்தார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share