அம்மோனியா வாயுக் கசிவு: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

Published On:

| By Pandeeswari Gurusamy

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அம்மோனியா வாயு கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலில் பேச அனுமதிக்காமல் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க பேரவைத் தலைவர் அழைத்ததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

சட்ட விதிமுறைகளை மீறி பேரவை தலைவர் செயல்படுகிறார் என எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share