புதுச்சேரி திருபுவனை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரான அங்காளன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, அக்கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார்.
இதையடுத்து அங்காளனின் இரண்டாவது மனைவி கவிப்பிரியா ஏப்ரல் 1ம் தேதி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து அங்காளனை எதிர்த்துப் போட்டியிட சீட் கேட்டார் என்று, நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து, அங்காளன் எம்.எல்.ஏ., எனது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் எனக்கு எதிராக என் மனைவியை முதல்வரிடம் அழைத்துப்போய் சீட் கேட்கச் சொல்லியுள்ளார்கள். என்னை எதிர்க்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் நேரடியாக வரட்டும். தேர்தலில் போட்டியிடட்டும். என் மனைவியின் பூர்விகம் தமிழ்நாடு. அதனால், புதுச்சேரியில் போட்டியிட முடியாது” என்று, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.”