தனது மகள் பவதாரிணியின் மறைவால் சோகத்தில் இருக்கும் இளையராஜா இன்று (ஜனவரி 26) உருக்கமுடன் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு பலரையும் கண்கலங்க செய்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இந்த திடீர் மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் முதல் அரசியல், திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பவதாரிணியின் உடல் இன்று மாலை 4 மணியளவில் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கே உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பவதாரிணியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இளையராஜா உருக்கம்!
இந்த நிலையில் பவதாரிணியின் தந்தையான இளையராஜா மறைந்த தனது மகள் குறித்து தற்போது உருக்கமான பதிவு ஒன்றைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அன்பு மகளே… pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024
பவதாரிணி குழந்தையாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா, “அன்பு மகளே…” என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.
மகள் இறந்த துக்கத்தில் சோகமுடன் பதிவிட்டுள்ள இளையராஜாவின் இந்த பதிவுக்கு கீழ் அவரது ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மறுக்கும் கட்சித் தலைவர்… மவுனம் காக்கும் நிதிஷ் : இந்தியா கூட்டணியில் தொடரும் குழப்பம்!
மகளை இழந்த துயரம் : பவதாரிணி குறித்து உருக்கமாக பதிவிட்ட இளையராஜா
சென்னை விமான நிலையத்தில்… லாக் செய்யப்பட்ட யுவன், வெங்கட் பிரபு கார்கள்!
