மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இந்தியா கூட்டணிக்கு நெருக்கடிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக பிகாரில் இருந்து முதல்வர் நிதிஷ்குமார் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஆனால் இதை அவரது கட்சித் தலைமை மறுத்துள்ளது. Confusion in the India alliance
தற்போது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவோடு பிகார் முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார்,
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போகிறார் என்றும் அவர் பாஜக ஆதரவோடு முதல்வராக புதியதாக பதவியேற்கப் போகிறார் என்றும் தகவல்கள் பிகாரில் இருந்து வந்துள்ளன.
இது இந்திய அரசியல் அரங்கையும், இந்தியா கூட்டணியையும் ஒரு சேர அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நிதிஷ்குமார் 28 ஆம் தேதி வரையிலான தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டார்.
வரும் ஞாயிற்றுக் கிழமை பாஜக ஆதரவோடு நிதிஷ் பிகாரின் முதல்வராக ஏழாவது முறை பதவியேற்க இருக்கிறார் என்றும்,
அவருடன் பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையே நேற்று ஜனவரி 25 ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் ஆர்.ஜே.டி., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின.
அதே நேரத்தில் பாஜக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி, உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக டெல்லி சென்றார். நிதீஷ் ஒருவேளை மீண்டும் அணி மாறினால், அவர் அணி மாறுவது இது நான்காவது முறையாக இருக்கும்.
பாஜகவின் பிகார் தலைவர்கள் ஆங்கில ஊடகங்களிடம், ‘இது எங்களுக்கு வெற்றிதான்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இன்று மாலை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் உமேஷ், ‘ நாங்கள் இந்தியா கூட்டணியில் நீடிக்கிறோம்’ என்று கூறினார்.
அவர் பேசினாலும் இதுவரை நிதிஷ்குமார் இதுவரைக்கும் ஏதும் பேசவில்லை.
243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ஆர்ஜேடிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர்; தொடர்ந்து பாஜகவின் 78; JD(U) 45, காங்கிரஸுக்கு 19, CPI (M-L) 12, CPI(M) மற்றும் CPI தலா இரண்டு, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) 4 இடங்கள், AIMIM க்கு ஒரு இடங்கள், மேலும் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இடம்பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
சொதப்பிய கில்… சீறிய ராகுல், ஜடேஜா : இந்தியா முன்னிலை!
பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி!
Confusion in the India alliance