தெலுங்கு இயக்குனர் வெங்கி குடுமுலா கடைசியாக வெளியான “பீஷ்மா” படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அந்த படத்தில் ஹீரோவாக நிதின் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் நிதின் நடிப்பில் வெளியான எந்த படங்களும் எதிர்ப்பார்ப்பார்த்த் வெற்றியை பெறவில்லை.
அதனை தொடர்ந்து, ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ள நடிகர் நிதினின் அடுத்த படத்தை வெங்கி குடுமுலா இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்தை VN2 ( Venky – Nithin 2) என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 26) இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பை முன்னிட்டு Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு “ராபின் ஹூட்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கோடீஸ்வரர்களிடமிருந்து பணத்தையும் நகைகளையும் திருடும் ஒரு தந்திரக்கார திருடன் கதாபாத்திரத்தில் நிதின் நடிக்கிறார்.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெங்கி குடுமுலாவின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சாய் ஶ்ரீராம் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது ராபின் ஹூட் படத்தின் Glimpse வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி!
சொதப்பிய கில்… சீறிய ராகுல், ஜடேஜா : இந்தியா முன்னிலை!
விடாமுயற்சி: ரசிகருக்கு ‘ஸ்வீட்’ சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்
சரண்டரான திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள்: அழுத்தம் கொடுத்த கட்சித் தலைமை!