5 தென்னிந்திய மாநிலங்களுக்கு ரூ.18,534 கோடி.. உ.பி.க்கு மட்டும் ரூ.19,208 கோடி வரிப் பகிர்வு!

By Mathi

|

Published on 2 Nov 2026, 6:36 AM

மத்திய அரசு விடுவித்துள்ள வரிப் பகிர்வு நிதியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.18,534 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசம் என்ற ஒரே மாநிலத்துக்கு மட்டும் ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வழங்கும் வரிப் பகிர்வு நிதியுடன் கூடுதலாக, அக்டோபர் 31-ந் தேதி ரூ.1,09,019 கோடியை விடுவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 2-வது கூடுதல் தவணை இதுவாகும்.

ADVERTISEMENT

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநில அரசுகள் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தவும், மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளை மேற்கொள்ளவும் இந்தக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்த மாநிலத்துக்கு எவ்வளவு?

மத்திய அரசு வெளியிட்டுள்ள மாநில வாரியான பட்டியலில் உத்தரப் பிரதேசத்துக்கு அதிகபட்சமாக ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அடுத்ததாக பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.8,010 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.7,866 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.4,597 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.4,504 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி, கேரளாவுக்கு ரூ.2,597 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.2,370 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.18,534 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் ரூ.19,208 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 5 தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த தொகையைவிட உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.674 கோடி கூடுதலாக வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel