கிச்சன் கீர்த்தனா : சோயா சங்க்ஸ் (Chunks) பக்கோடா

Published On:

| By Minnambalam

ரசித்து ரசித்து மனிதன் உருவாக்கிய எத்தனையோ சுவையான உணவு வகைகள் உலகில் இருக்கின்றன. போகிற போக்கில் மனிதன் தயாரித்த பக்கோடா, சுவைகளின் உன்னதம்… ருசிகளில் அதிருசி. இதன் சிறப்பம்சமே, நினைத்தவுடன் செய்துவிடக்கூடிய எளிமையான செய்முறைதான். இந்த சோயா சங்க்ஸ் பக்கோடாவும் அப்படிப்பட்டதுதான். நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?

ADVERTISEMENT

சோயா சங்க்ஸ் – ஒரு கப்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
ஓமம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
பெரிய வெங்காய விழுது – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்து எடுக்கவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய், தண்ணீர் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

கலவை கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கலந்துவிடவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்து எண்ணெயில் சேர்த்து நன்கு வேகவிட்டுப் பொரித்தெடுக்கவும்.

ADVERTISEMENT

இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு

அரைக்கீரை பக்கோடா

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share