சென்னையில் இன்று (ஜூலை 3) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் காலை மாலை என இரண்டு முறை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1,08,400க்கு விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு 2400 வரை உயர்ந்தது. இதனால் ஆபரணத்தங்கம் விலை 2 நாட்களில் ரூ.3600 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில்,இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ. 13,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.140 உயர்ந்து ரூ.11,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ.91,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000வரை உயர்ந்து ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 2-7-2026 | 1,08,400 |
| 1-7-2026 | 1,06,000 |
| 30-6-2026 | 1,05,600 |
| 29-6-2026 | 1,06,400 |
| 28-6-2026 | 1,06,960 |
| 27-6-2026 | 1,06,960 |
| 26-6-2026 | 1,06,400 |
| 25-6-2026 | 1,05,120 |
| 24-6-2026 | 1,06,800 |
| 23-6-2026 | 1,08,480 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 2-7-2026 | 255 |
| 1-7-2026 | 245 |
| 30-6-2026 | 245 |
| 29-6-2026 | 245 |
| 28-6-2026 | 245 |
| 27-6-2026 | 245 |
| 26-6-2026 | 245 |
| 25-6-2026 | 230 |
| 24-6-2026 | 240 |
| 23-6-2026 | 250 |
