நகை வாங்கப் போறீங்களா.. அதிரடியாக உயர்ந்த விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஜூலை 2) ஒரு சவரன் தங்கம் ரூ.1200 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில்,இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ. 13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.11,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.89,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000வரை உயர்ந்து ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
1-7-20261,06,000
30-6-20261,05,600
29-6-20261,06,400
28-6-20261,06,960
27-6-20261,06,960
26-6-20261,06,400
25-6-20261,05,120
24-6-20261,06,800
23-6-20261,08,480
22-6-20261,08,800
21-6-20261,08,800

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

1-7-2026245
30-6-2026245
29-6-2026245
28-6-2026245
27-6-2026245
26-6-2026245
25-6-2026230
24-6-2026240
23-6-2026250
22-6-2026255
21-6-2026255
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share