சென்னையில் இன்று (ஜூலை 1) காலையில் ரூ.800 குறைந்த தங்கத்தின் விலை மாலையில் ரூ.1,200 அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.150 வரை உயர்ந்துள்ளது.
தற்போதைய தங்கத்தின் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் ஒரு கிராம் தங்கம் ரூ. 150 உயர்ந்து ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,200 உயர்ந்து ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.10,940-க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் ஒரு கிராம் ரூ.130 உயர்ந்து ரூ.11,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சரவன் ரூ.1,040 உயர்ந்து ரூ.88,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒருகிராம் ரூ. 245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 30-6-2026 | 1,05,600 |
| 29-6-2026 | 1,06,400 |
| 28-6-2026 | 1,06,960 |
| 27-6-2026 | 1,06,960 |
| 26-6-2026 | 1,06,400 |
| 25-6-2026 | 1,05,120 |
| 24-6-2026 | 1,06,800 |
| 23-6-2026 | 1,08,480 |
| 22-6-2026 | 1,08,800 |
| 21-6-2026 | 1,08,800 |
| 20-6-2026 | 1,08,800 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 30-6-2026 | 245 |
| 29-6-2026 | 245 |
| 28-6-2026 | 245 |
| 27-6-2026 | 245 |
| 26-6-2026 | 245 |
| 25-6-2026 | 230 |
| 24-6-2026 | 240 |
| 23-6-2026 | 250 |
| 22-6-2026 | 255 |
| 21-6-2026 | 255 |
