அதிவேக யுகத்தில் பசிக்காக எளிதில் கிடைக்கக்கூடிய உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுப்பொருள்களை நினைத்த நேரத்தில் ஆர்டர் செய்து ருசிக்கிறார்கள். இதுபோன்ற முறையற்ற உணவுகளால் அஜீரணப் பிரச்சினையில் தொடங்கி உடல் எடை அதிகரித்தல், அல்சர் உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்க வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு ரெசிப்பி செய்து சுவைக்கலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
கொப்பரை தேங்காய்த் துருவல் – ஒரு கப்
(தேங்காய்த் துருவலுக்குப் பதில் கடைகளில் கிடைக்கும் ‘டெஸிகேடட் கோகனட்’ தூளும் பயன்படுத்தலாம்)
பால் பவுடர் – ஒரு கப்
பொடித்த சர்க்கரை – முக்கால் கப்
பால் – 6 டீஸ்பூன்
பாதாம் (அ) முந்திரி – அலங்கரிக்க
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய்த் துருவல், பால் பவுடர், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இத்துடன் சிறிது சிறிதாக பால் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, பாதாம் அல்லது முந்திரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.