தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி அவ்வப்போது தேர்தல் ஆணையம் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில் வேலை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 19) தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக அவினாஷ் குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக அவினாஷ் குமார் நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு உள்துறை அமைச்சர் தீரஜ் குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

