ADVERTISEMENT

‘சாக்கடை கிட்ட கல்லை வீசினால்..’ எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Eps Vs Sengottaiyan

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையேயான கருத்து மோதல் காரணமாக, அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி. இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் செங்கோட்டையன் களம் காண்கின்றார்.

நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த செங்கோட்டையன், “50 லட்சம் கோடி சம்பாதித்தும் எடப்பாடிக்கு ஆசை தீரவில்லையா?” என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து நேற்று கோபிசெட்டிபாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். செங்கோட்டையன் மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்ததையும், அதன் பிறகு அவரது பதவி பறிபோனதையும் சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். செங்கோட்டையன் போட்ட ஆட்டம் எல்லாம் ஆவணமாக உள்ளது. எனக்கு இன்னொரு முகம் உள்ளது” என்று ஒருமையில் விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “தவெகவிற்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுகவும் திமுகவும் இணைந்து கூட்டுக் கொள்ளை நடத்துகின்றன. எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் குழம்பிப் போய் உள்ளார். அதற்கு மேல் நான் சொல்ல முடியாது. சாக்கடை கிட்ட கல்லை வீசினால் என்ன ஆகும்? சாக்கடை நம்ம மேலே அடிக்கும். குப்பையை கிளறி விட்டால் என்ன ஆகும்? நாற்றம் எப்படி இருக்கும்? அதே மாதிரி தான் உள்ளது எடப்பாடி பழனிசாமியின் பேச்சு. அவரைப்பற்றி ஆதாரத்தை நான் எடுத்து விட்டால் தாங்காது. நான் எப்போது வந்தேன், அவர் எப்போது வந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். நான் அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

ADVERTISEMENT

காய்கிற மரம் தான் கல்லடி படும். எப்படிப்பட்ட சொற்களில் வசைபாடினாலும் சரி, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எடப்பாடி மாதிரி நான் எல்லோரையும் ஏமாற்ற மாட்டேன். காலம் அதற்கு பதில் சொல்லும். எடப்பாடி குறித்து நிறைய ரகசியம் இருக்கிறது. அதை வெளியே சொல்ல முடியாது. ரகசியம் அது பரம ரகசியம். சிதம்பர ரகசியம். ஜெயலலிதா என்னை எப்படி வைத்திருந்தார் என்று அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமியைத் தான் 2009 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கி விட்டார். பிறகு நான் தான் அழைத்துப் போய் வாரியம் போடச் சொல்லி செய்து தந்தேன். எனக்கு பதவி கொடுத்தார் என்பது தவறு. நான் முன்மொழியாவிட்டால் எடப்பாடி பழனிசாமியால் எப்படி முதல்வர் ஆகி இருக்க முடியும்? என்னுடன் 64 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். எனக்கு பதவி கொடுத்தார் என்பது பொய் அவர் தோல்வி பயத்தால் குழம்பிப் போயிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share