சென்னை சூப்பர் 6: திராவிட மாடல் 2.o வாக்குறுதிகள் என்ன? – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Apr 2026, 11:38 AM

MK Stalin

தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னைக்கு என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை சூப்பர் 6 என்ற பெயரில் பிரத்யேக தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 19) வெளியிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திற்கு என்ற தனி தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். “சென்னை சூப்பர் -6 ” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில், மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து திட்டங்கள், திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்பு திட்டங்கள், மனிதாபிமானம் மற்றும் அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்குத் தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமை தளம் என ஆறு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

திராவிட மாடல் 2.0 வாக்குறுதிகளில், சென்னை மாவட்டத்திற்கென அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

சென்னை சூப்பர் – 6 வாக்குறுதிகள்

மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்

  • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
  • அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
    கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும்.

சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து

  • பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
  • போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள்

  • எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.
  • மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.
    மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.
  • பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.
    அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.

மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சனைக்குத் தீர்வு

  • விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
  • தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.

உலகளாவிய சிறப்பு மையம்

  • Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologiesக்கான சிறப்பு மையம்
  • ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
  • 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்

உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway)

  • உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு
  • உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
  • ஆராய்ச்சி மையம்
  • அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel