ADVERTISEMENT

போட்ட ஆட்டம் எல்லாம் ஆவணமா இருக்கு.. எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. செங்கோட்டையனை ஒருமையில் விமர்சித்த எடப்பாடி

Published On:

| By Mathi

Edappadi Palaniswami

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமையில் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

கோபிசெட்டிப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இங்கே இருக்கிற எம்.எல்.ஏ மாதிரி திமிர் பிடிச்ச ஆள் இல்லை. உங்களையெல்லாம் அடிமையா வச்சிருந்தார்.. இனிமேல் சுதந்திர காற்றை வாங்குவீர்கள். செங்கோட்டையனைப் பற்றி பேசியே ஆகணும். இதுவரைக்கும் பேசாமல் இருந்தேன். அவரு தானா எம்.எல்.ஏ ஆகல. இங்க இருக்கின்ற அதிமுக நிர்வாகிகள் இரவென்றும் பகலென்றும் பாராமல் எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி ரத்தத்தை வியர்வையாக மண்ணிலே சிந்தி உங்க உழைப்பால் அவர் எம்.எல்.ஏ ஆனார். அப்படித்தானே ஆனார்? நீங்க எல்லாம் பாடுபட்டு தானே ஆனார்? ஆனா சுயநலம், சுயநலம், திமிர், அகங்காரம், அகங்காரம்; அதனால அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் வந்துச்சு. கட்சிக்கு கட்டுப்பாடு தேவையா இல்லையா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் வெளியேற்றுவது என்பதை தொடர்ந்து அண்ணா திமுக கடைபிடித்தது. அதைத்தானே கடைபிடிச்சோம்..

ADVERTISEMENT

இந்த கோபிசெட்டிபாளைய நகரத்துல ஒருத்தர் கூட எனக்கு அடையாளம் தெரியாது, அப்படிதான் கட்சியை வச்சிருந்தார். ஒரு ஆளையும் என்னை பார்க்க விடமாட்டார். இங்க நகர செயலாளர் இருப்பார், நான் அப்பதான் பார்த்தேன்; என்னை வந்து பார்க்கும்போதுதான் இவர்தான் நகரச் செயலாளர்னு தெரிஞ்சது.. அந்த அளவுக்கு செங்கோட்டையன் ஒரு மோசமான குணம் படைத்தவர். ஒரு நல்ல சட்டை போட்டுட்டு போனா கூட பொறுக்காது. கஷ்டப்பட்டு நீங்க உழைச்சு நீங்க சம்பாதிச்சு அதுல வாங்கின சட்டை போட்டுட்டு போனா கூட பொறுக்காத ஆள் நாட்டுக்கு தேவையா? சிந்திச்சு பாருங்க.

செங்கோட்டையன் இருக்கின்ற வரை யாராவது நிம்மதியா வாழ முடிஞ்சதா? இந்த பகுதியில இருக்கிற சிந்து ரவிச்சந்திரனை பொட்டி கட்டி அனுப்பிச்சிட்டார். அப்புறம் டிஸ்ட்ரிக்ட் சேர்மன் கந்தசாமி… அவர் என்ன செஞ்சார் பாவம், டிஸ்ட்ரிக்ட் சேர்மனே கட்சியை விட்டுப் போறாங்கன்னா இவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? அவ்வளவு கீழ்த்தரமா பேசக்கூடிய மனிதர் இந்த செங்கோட்டையன். அப்படித்தானே? இனிமே மரியாதை கொடுத்தெல்லாம் பிரயோஜனம் இல்லை, மரியாதை இல்லாத ஒரு மனிதர். அப்படித்தானே?

ADVERTISEMENT

உலகத்துல தன் மனைவியும் மகனும் புருஷன் நல்லா இருக்கணும்னு நினைப்பாங்க. நம்ம வீட்டுப் பிள்ளைகளும் அப்படித்தான் நினைக்குது, நம்ம வீட்டு மனைவியும் அப்படித்தான் நினைப்பாங்க. நமக்கு பதவி வந்தா கணவருக்கு பதவி வந்தா மகிழ்ச்சியா இருக்கும், மகனுக்கு அப்பா பதவி வந்தா மகிழ்ச்சியா இருக்கும். ஆனா இவருக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தபோது இவருடைய மனைவி, செங்கோட்டையனுடைய மனைவி, செங்கோட்டையனுடைய மகன் தலைமைச் செயலகம், வந்து ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தாங்க. அது கேவலமான புகார். நான் வந்து இந்த பதவியில இருக்கிறதுனால அதைச் சொல்லல. அது என்ன குற்றச்சாட்டுன்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும். இங்க இருக்கிற கோபிசெட்டிபாளையத்தில இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும்.

செங்கோட்டையன் மனைவியும் மகனும் ஜெயலலிதாவிடம் பேசிவிட்டு படிக்கட்டுல இருந்து கீழே இறங்குறதுக்குள்ள பதவி போயிடுச்சு. பதவிய உருவிட்டு விட்டாங்க ஜெயலலிதா.. ஜெயலலிதாவுக்கு விசுவாசமா இருந்தா பதவிய எடுப்பாங்களா?

ADVERTISEMENT

யாரு கம்ப்ளைன்ட் பண்ணது? இங்க நகரச் செயலாளர் கம்ப்ளைன்ட் பண்ணல, ஒன்றியச் செயலாளர் கம்ப்ளைன்ட் பண்ணல, தொகுதியில் இருக்கிற மக்கள் கம்ப்ளைன்ட் பண்ணல. தன்னுடைய மனைவி, மகன்… அப்படி ரெண்டு பேரும் இவர் மேல புகார் கொடுத்து, அது என்ன புகார்னு நீங்களே தெரிஞ்சுக்கலாம். இவர் எப்பேர்ப்பட்ட ஆளுன்னு உங்களுக்குத் தெரியும். தெரியும்ல?

அதை நான் சொல்லக்கூடாது. ஏன்னா என்னுடைய பதவிக்கு அது சரியா இருக்காது. ஆக அந்த புகார் கொடுத்த உடனே உடனடியாக இவரை பதவியில் இருந்து நீக்கிட்டாங்க. பிறகு என்னை அழைச்சு சொன்னாங்க, ‘இப்படிப்பட்ட ஆளு கட்சியில வச்சிருக்கிறதே தப்பா போச்சு’ன்னாங்க.

ஒரு அமைச்சரா இருக்கிறவரு, பல முறை எம்.எல்.ஏ-வா இருந்தவரு, அவர் மீது அவருடைய மனைவியும் மகனும் வந்து புகார் கொடுக்கிறாங்கன்னா, இவரெல்லாம் எப்பேர்ப்பட்ட மோசமான மனிதர்னு ஜெயலலிதா சொன்னாங்க. அப்படிப்பட்ட ஆளை, நான் முதலமைச்சர் ஆகி என்னுடைய அமைச்சரவையில சேர்த்ததுதான் நான் செஞ்ச தப்பு. இல்லையென்றால் வீதியில போனா கை எடுத்து கும்பிடுறதுக்கு யோக்கியதை இருக்குதா அந்த ஆளுக்கு?

என்னுடைய அமைச்சரவையில, கெஞ்சி கண்ணீர் விட்டார் மனுஷன். இப்பெல்லாம் எதேதோ பேசுறார்… வாய் கொழுப்புல பேசிக்கிட்டு இருக்கார். அந்த மனுஷன். நீ அழுதது எனக்குத் தெரியாதா? நீ வடிச்ச கண்ணீர் தெரியாதா? ‘நீ இருக்கும்போது, நீ முதலமைச்சரா இருக்கும்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலனா வேற யாரு கொடுக்கப் போறா?’ன்னு கேட்டீயே..

எனக்கு வந்து ஒரு காலத்துல நல்ல நண்பராத்தான் செங்கோட்டையன் இருந்தாரு, இல்லைன்னு நான் மறுக்கல. நான் வந்து இவர் மாதிரி பொய் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் அந்த நட்பு அடிப்படையில அமைச்சர் பதவி கொடுத்தேன். அந்த மரியாதை உனக்கு இருக்குதா? ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ன்னு 2,000 வருஷத்துக்கு முன்னாடியே ஐயன் திருவள்ளுவர் சொல்லிட்டுப் போனாரு. இது மாதிரி மனிதர்களையெல்லாம் மன்னிக்க முடியுமா?

நீ எங்க ஜெயலலிதாவை மதிச்ச? இங்க பாருங்க, பள்ளிக்கூடத்துல போய் சைக்கிள் குடுக்கிறார். யார் படம்? கலைஞர் படம், ஸ்டாலின் படம்! யோக்கியதை எப்படின்னு பாரு! செங்கோட்டையனுடைய யோக்கியதையை பாரு! இந்த பக்கம் கலைஞர் படம், இந்த பக்கம் ஸ்டாலின் படம்..

அப்பவே திமுகவின் பி டீமுக்குப் போயிட்டார். நான் கண்டுபிடிச்சுட்டேன். நீ திமுக-வுடைய உளவாளியா இருப்பதை கண்டுபிடிச்சாச்சு! என்னைக்கு கலைஞர் படத்தையும், ஸ்டாலின் படத்தையும் போட்டுட்டு போய் நீ விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு கொடுத்தயோ, அப்பவே உன்னுடைய முகத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். நீ சரியான ஆள் இல்ல. அண்ணா திமுக விசுவாசி இல்ல. அண்ணா திமுக-வுக்கு உள்ளே இருந்து குழி தோண்டிப் புதைக்கின்ற ஒரு உளவாளியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

அதனால்தான் அடிக்கடி ஸ்டாலினை சந்திக்கிறது. சட்டமன்றத்துல ஒரு வார்த்தை கூட திமுக-வை எதிர்த்துப் பேசுறதே கிடையாது. ஆக, மனசுக்குள்ள இருக்கிறதெல்லாம் இப்போ கக்கிக்கிட்டு இருக்கார். இவரை வச்சிருக்கலாமா?

இப்படிப்பட்ட ஆள் மன்னிக்க முடியாத ஆள்.
இப்ப எங்க போயிட்டார்? அங்க கேவலம் துண்ட போய் வாங்குறார். இப்போ யார் போட்டோ வச்சிருக்கார்?

சேர வேண்டிய இடத்துலதான் சேர்ந்திருக்கார். ஆக, நீ வந்து என்னை பத்தி கேவலமா பேசுற… செங்கோட்டையன் அவர்களே, நீ 100 நாள் ஜெயில் இருந்துட்டு வந்திருக்கே. வந்துட்டு இருந்தாருல்ல? நீ யோக்கியமான ஆளா?

நாக்கு இருக்குது, வாக்கு இருக்குதுன்னு பேசுனியே, அசிங்கமா போய் ரோட்ல நடக்க முடியாது, அத்தனை ஆதாரத்தை வைத்திருக்கிறேன்.

சும்மா நினைச்சுட்டு இருக்கியா நான் முதலமைச்சரா இருக்கும்போது? நீ போட்ட ஆட்டமெல்லாம் எங்களுக்குத் தெரியும். எல்லா ஆட்டமும் தெரியும்.. நீ யார் யாரெல்லாம் எப்பப்ப கேஸ் இருந்தது, எல்லாம் நான் முதலமைச்சரா இருக்கும்போது எடுத்து வச்சுட்டேன். நீ என்னைக்கு பி-டீமா (B-team) செயல்பட ஆரம்பிச்சியோ, அன்னைக்கே நான் உஷாராயிட்டேன்.

அதனால ஜாக்கிரதையா நீ பேசணும். ஆனா ஆட்சி மாறும், காட்சி மாறும். ஆட்சி மாறுகின்ற பொழுது, நீ வந்து தாக்குபிடிக்க முடியாது. உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். எப்படிப்பட்ட ஆளுன்னு நல்லா தெரியும்ல? எங்காவது சவுண்டு கொடுத்துப் பேசுனா கிட்ட கூட போகமாட்டார். போவாரா?

இப்ப நடக்கிற தேர்தலை ஒரு லட்சம் ஓட்டுல ஜெயிப்பேன். உன்னால சவால் விட முடியுமா?

சில ஒன்றியச் செயலாளர் வந்து இப்ப தானுங்க உங்ககிட்ட போட்டோ எடுக்கிறேன்னாங்க. எப்படி? பொதுச் செயலாளர்கிட்ட இப்பதான் வந்து போட்டோ எடுக்கிறேன்னா எப்படி கட்சி வச்சிருந்தாருன்னு பாருங்க. எவ்வளவு மோசமான ஆளு, கொடுமையான ஆளு! பச்சையா பேச ஆரம்பிச்சிருவேன், என்னுடைய பதவி இருக்கிறதுனால அடக்கி வாசிக்கிறேன்.

செங்கோட்டையன் அவர்களே, நான் எப்பேர்ப்பட்டவன்னு உனக்குத் தெரியாது. என்னுடைய முகம் ஒரு பக்கம் தான் பார்த்திருக்கே, இன்னொரு பக்கம் பார்த்ததில்லை. நான் எதுக்கும் துணிஞ்சவன், நல்லா ஞாபகம் வச்சுக்க. எதைப் பத்தியும் கவலைப்படாதவன். ஸ்டாலினையே விரல் விட்டு ஆட்டுனவன். என்னுடைய கேள்விக்கு அவரே பதில் சொல்ல முடியாமத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவு பெரிய கட்சி! இன்னைக்குத் தாயில்லாத பிள்ளை மாதிரி நாம் இருக்கிறோம். இப்பேர்ப்பட்ட கட்சியை உடைக்க எவ்வளவு முயற்சி செஞ்சாங்க, நீ அதுக்கு எவ்வளவு துணை போன, எல்லாமே தெரியும். தெரிஞ்சு உன்னை நான் வச்சுக்கிட்டு தான் இருந்தேன். ஏன்னா, ஒரு பண்பா இருக்கணும். ஒரு மக்கள்கிட்ட பண்பா இருக்கணும். ஒரு கட்சித் தலைவர் எப்படிப் பேசறதுன்னு வரையறை முறை செய்ய வேண்டும். அதை விட்டுட்டு வாய்க்கு வந்த மாதிரி சொந்தப் பிரச்சினையெல்லாம் வேணும்னே திட்டமிட்டு ஒரு தவறான கருத்து.

எனக்கு பக்கத்துல பல கோடி ரூபாய்க்கு இங்க மில் இருக்குதாம். யோவ், எங்க சம்மந்தி ஃபேக்டரியா, அவர் எங்காவது சண்டை பண்ணி விட்டுறாத. அவர் 1997-லேயே கட்டி வச்சிருக்காரு. 1997-லேயே கட்டி… இன்னொன்னு, எங்க பையனுடைய சகலை, அவரு 96-லேயே கட்டி ஓடிக்கிட்டு இருக்குது. அப்ப எங்களுக்கும் அவருக்கும் சம்மதம் இல்லை. 20 வருஷம் கழிச்சு தான் என் பையனுக்குக் கல்யாணம் பண்ணோம். அந்தச் சொத்தைப் பரவாயில்லை சொல்லு, அப்பத்தான் கடன் கொடுப்பான். கடன் கொடுக்கிறவன் கூட இப்பல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு பணம் கேட்டா கொடுக்க மாட்டேங்குறான். இந்த ஃபேக்டரி, இன்னும் ரெண்டு ஃபேக்டரி சேர்த்துச் சொல்லு. நல்லா இருக்கு, ஏன்னா நமக்கு அப்பத்தாங்க பெருமை, ஏதாவது ஒரு நாலு ஃபேக்டரி கடன் வாங்கி கட்சிக்காரனுக்குக் கொடுக்கணும் இல்ல?

நீ ஓட்டு வீட்டுல இருந்து எப்படிப் பங்களா கட்டின? கோபிச்செட்டிபாளையத்துலயும் தெரியும்ல? 30 ஏக்கர்ல எப்படி காலேஜ் வந்தது? கதிர் காலேஜ் எப்படி வந்தது? என்னென்ன மரம் காய்காய்ச்சுதா? பறிச்சியா? செங்கோட்டையன் அவர்களே, நாவடக்கம் தேவை. உனக்கு வயதுக்குத் தகுந்த மாதிரி பேச்சு தேவை. விசிலடிக்கிற இடத்துக்குப் போனா அப்படித்தான் பேச்சு வரும். பேச்சு இருக்கிற இடத்துல இருந்தா நல்ல பேச்சு வரும். ஆனா இடம் மாறினா அதுக்குத் தகுந்த மாதிரி தான் அந்த கருத்து வெளிப்படும்.

இந்தத் தேர்தல்ல ஒவ்வொரு ஓட்டும் முக்கியமான ஓட்டு. மக்களை உதாசீனப்படுத்துகின்ற மனிதர் தேர்தல்லப் போட்டியிடுறாரு அவருக்கு வாக்களிப்பீங்களா? நல்லா சிந்திங்க நான் விளையாட்டா சொல்லல. 9 தடவ நின்னா 10 தடவ நின்னா என்ன கிழிச்சார் இந்த பக்கம்? கோபிசெட்டிபாளையத்துல என்ன செஞ்சாரு?

செங்கோட்டையன் மாதிரிப் பொய் பேசி வாழ வேண்டிய அவசியம் இல்லை. அப்புறம் பணக்காரனைப் பார்த்தா தான் பேசுவார், சாதாரண ஆளைப் பார்த்தா பேசமாட்டாரு. நான் எப்போ போனாலும் பார்ப்பேன் எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியுமா இங்க இருக்குறவனு சொல்லமாட்டாரு. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருக்கறவங்கள சொல்லமாட்டாரு. எனக்குக் கோயம்புத்தூர்ல அந்தப் பணக்காரன், திருப்பூரில் அந்தப் பணக்காரன் அப்படினு தான் சொல்லுவாரு. ஆனா இவரு ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்கள் ஓட்டுப் போட்டு ஓட்டுக்காகக் கஷ்டப்பட்ட பொறுப்பாளரப் பத்தி வாயே திறக்க மாட்டார். திறந்துருக்காரா? ஒரு நாளாவது உங்களைப் புகழ்ந்து பேசிருக்காரா? என்னுடைய பகுதியில கட்சிக்காக உழைக்கின்றவங்க பல முறை சேர்மனா இருக்காங்க. நான் வந்து தலையிடுறதே கிடையாது. ஒரு பிரசிடெண்ட், கவுன்சிலரை கூட நான் தலையிடமாட்டேன் அவுங்ககிட்டயே ஒப்படைச்சிருவேன். ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் அவுங்ககிட்டயே ஒப்படைச்சிருவேன், நீங்களே பாருங்க இது உங்க கட்சி இது உங்களுடைய கட்சி. எனக்குப் பொதுச்செயலாளர் பதவி குடுத்திருக்காங்க என்னுடைய பதவியை நான் பாக்குறேன். ஒன்றியச் செயலாளர் பதவி ஒன்றியச் செயலாளர் பாருங்க, அப்படின்னு சுதந்திரமா விட்டுக்கிறேன்.

அதுமட்டுமல்லாம எங்களுடைய சேலம் மாவட்டம் முழுவதும் 11 இடம் 10 இடத்துல நான் ஜெயிச்சுக் கொடுத்தேன். ஈரோட்டுல நான் தான் சூரப்புலிங்கிற ஈரோட்டுல இந்த மாவட்டத்துல நீங்க தான அதிக நாள் மந்திரியா இருந்தீங்க? எத்தனை தொகுதி கடந்த முறை ஜெயிச்சுக் குடுத்தீங்க? எத்தனை தொகுதி ஜெயிச்சுக் குடுத்தீங்க? இன்னைக்கு அங்க டவுன்ல எல்லாமே அவுட். சிந்திச்சுப் பாருங்க இதே அண்ணா திமுக எங்களுடைய சேலம் மாவட்டம் 11 தொகுதியில் 10 தொகுதி 2021 ஆம் ஆண்டு ஜெயிச்சுக் கொடுத்தோம். இப்ப சொல்றேன் இப்பதான் 2026-ல அண்ணா திமுக 11-க்கு 10 இடத்துல நான் ஜெயிக்கிறோம். உன்னால உன் தொகுதிய நீ ஜெயிக்க முடியுமான்னு பாரு செங்கோட்டையன் அவர்களே. உன் தொகுதிய நீ ஜெயிக்க முடியுமான்னு பாரு செங்கோட்டையா விளையாட்டா நினைக்காத உனக்கெல்லாம் மரியாதை கொடுத்துப் பிரயோஜனமே இல்லை. மரியாதை கொடுக்க வேண்டுமா? மரியாதை கொடுக்கத் தகுந்த ஆளா? என்னைக்கிச் சிறுமையா பேச ஆரம்பிச்சியோ அன்னைக்கே உன் செல்வாக்கை இழந்துட்ட. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share