மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய செயல்பாடுகளை விரிவாக விவரித்துள்ளார்.
மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி:
கேள்வி: எப்படிப் போகிறது பிரச்சாரம்? கடும் பிரச்சாரமா இருக்கு களத்துல, பார்த்துகிட்டு இருக்கிறோம்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: பிரச்சாரம் ரொம்ப எழுச்சியா இருக்கு. எப்பவுமே நான் ஒரு ஆகஸ்ட் மாசத்துல இருந்து தொடர்ந்து நான் தொகுதி முழுவதும் நடைப்பயணம் போயிட்டு இருக்கேன். குறிப்பா எல்லா அதிகாரிகளையும் கூப்பிட்டு, நான் கார்ப்பரேஷன்ல ஓவர்சைட் கம்மியா இருக்குன்ற கவலை வந்து, அதனால நானே கொஞ்சம் எம்.எல்.ஏ போக்கஸ் பண்ணி, ஒரு ஆறு மாசமா கிட்டத்தட்ட ஒரு மூணு ரவுண்டு அடிச்சிட்டேன். ஒரு 800-க்கும் சொச்சம் புகார்கள்; குடிதண்ணீர்ல இருந்து, பட்டால இருந்து, ஏதாவது டாய்லெட் ரிப்பேர்ல இருந்து அதெல்லாம் ஒரு 600-க்கும் சொச்சம் நிறைவேற்றிட்டோம்.
அதனால இப்போ போகும்போது இட்ஸ் மோர் லைக் எ… என்ன சொல்றது, ஒரு விழா மாதிரி. நான் போய் எல்லாத்தையும் சந்திச்சு சந்தோஷமா… எப்பவுமே என்கிட்ட கையில ஃபுல் லிஸ்ட் இருக்கும். ஒவ்வொரு தொகுதிக்குப் போகும்போது இப்ப நான் போஸ்ட் பண்றேன் சோஷியல் மீடியால. இங்கெல்லாம் என்ன பண்ணிருக்கோம், எத்தனை புகார் வந்துச்சு, எத்தனை தீர்த்திருக்கோம், எத்தனை பேருக்கு உதவி பண்ணிருக்கோம், எத்தனை திட்டம் கொண்டு வந்திருக்கோம்.
கேள்வி: இது ஆக்சுவலா உங்களுக்கு அந்த பழக்கமே இருக்குல்ல? ஆறு மாசத்துக்கு ஒரு தடவை…”
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: ஆமா, அது பெரிய அறிக்கை. அது வந்து பொதுவா தொகுதிக்கு. இது ஒவ்வொரு வார்டுக்கும், ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் என்ன பண்ணிருக்கோம் அப்படின்ற தகவலோட போவோம். அது யூசுவலா (Usually) கூட வந்துட்டு இருக்கவங்க பேசிட்டே வருவாங்க… ‘இங்க பேவர் பிளாக் (Paver block) போட்டோம், அங்க வடிகால் கட்டுனோம், அங்க நியாய விலைக் கடை கொண்டு வந்தோம், இங்க சமுதாயக் கூடம் கட்டுனோம், இங்க போர்வெல் (Borewell) போட்டோம், இங்க இத்தனை பேருக்கு டிரெய்னிங் கொடுத்தோம்’ அப்படின்ற மாதிரி பேசிட்டே வருவாங்க. ஏதாவது திட்டம் இருந்துச்சுன்னா நான் சிறப்பு முயற்சியா எடுத்துப் பேசுவேன். அதான் வழக்கம்.
கேள்வி: இவ்வளவு பணிகள் நீங்க செய்யுறீங்க. ’10 வருஷமா எம்.எல்.ஏ.-வா இருந்து என்ன செஞ்சாரு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள்’ அப்படிங்கிற அந்த விமர்சனம் வருதுல்ல? அதுக்கு என்ன பதில் சார்?
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: அதாவது நான் சொல்லுங்க, நான் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன். நான் வரும்போது ஒரு எடிட்டர் என்னைக் கூப்பிட்டாங்க. என் வேட்பாளர் அறிவிப்பு வந்தப்போ என் டிகிரி (Degree) எல்லாம் போட்டிருந்தாங்க. என் பெயர் போட்டு இந்த டிகிரி, இந்த டிகிரினு… அப்போ அவங்க கூப்பிட்டு சொன்னாங்க, ‘சார் நான் 16 வருஷமா அரசியல் கவர் (Cover) பண்ணிட்டு இருக்கேன், இந்த அளவுக்கு குவாலிஃபிகேஷன் (Qualification) வாங்குன ஒரு வேட்பாளரை நான் பார்த்ததில்லை’ அப்படின்னு சொன்னாங்க. அப்போ நான் சொன்னேன், ‘மேடம், அது எந்த அளவுக்கு அது தேவை அரசியலுக்குன்னு எனக்குச் சொல்லத் தெரியல. பெருந்தலைவர்கள் பார்த்தீங்கன்னா கலைஞர், காமராஜர் எல்லாம் அந்த அளவுக்குப் பள்ளியில படிக்கல. அதனால என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல்வாதிக்கு முதல் திறன், அடையாளம், குணம்… அதாவது மக்கள் நலன் மேல அக்கறை வைத்திருப்பவர்களாக இருக்கணும். முதல், ரொம்ப ஒரு அந்த மனப்பான்மை இருக்கணும். இரண்டாவது, ஏதோ ஒரு கொள்கை அடிப்படையில செய்யணும். நான் சமூக நீதிக்காகச் செய்யுறேன், நான் பொருளாதார வளர்ச்சிக்காகச் செய்யுறேன், பாஜகவை எடுத்துக்கிட்டா ஹிந்துத்துவாக்காகச் செய்யுறேன்… ஏதோ ஒரு அடிப்படை கொள்கை இருக்கணும். மூணாவது, அந்த ஏரியாவோட நல்ல உறவு இருக்கணும். அண்ணா சொன்னார் ‘மக்களிடம் செல், மக்களோடு வாழ்’. அப்பதான் உனக்குத் தெரிய வரும் என்னன்னு. சோ, இது வந்து இருக்கதுலயே முக்கிய குணம்’.
…சோ, இது வந்து இருக்கதுலயே முக்கிய குணம். நாலாவதுதான் அறிவு, திறன், படிப்பு இதெல்லாம். இது எதுக்குத் தேவை அப்படின்னா, ஒரு பிரச்சனையை எப்படி அணுகுறது, எப்படித் தீர்க்கிறது, ஒரு திட்டத்தை எப்படி வடிவமைக்கிறது அப்படின்றதுக்குத் தேவை. என்கிட்ட அந்த நாலுமே இருக்குன்னு நான் நம்புறேன்.
குறிப்பா, கடந்த 10 வருஷமா நான் இந்தத் தொகுதியில செஞ்ச வேலைகள்… நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-வா இருந்தப்பவும் சரி, இப்போ ஆளுங்கட்சி அமைச்சரா இருந்தப்பவும் சரி, என்னோட அணுகுமுறை ஒண்ணுதான். புள்ளிவிவரங்களோட பேசுறது, தரவுகளோட (Data) திட்டங்களைச் செயல்படுத்துறது. மதுரை மத்திய தொகுதியில இருக்கிற ஒவ்வொரு வார்டுக்கும் நான் தனித்தனியா அறிக்கை வெளியிடுறேன். அதுல அந்த வார்டுல என்னென்ன பணிகள் முடிஞ்சிருக்கு, என்னென்ன பாக்கி இருக்குன்னு தெளிவா இருக்கும்.
மக்கள் என்கிட்ட கேக்குறது அடிப்படை வசதிகள் தான். குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி. இதையெல்லாம் தாண்டி, மதுரையோட ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நான் சில திட்டங்களை முன்னெடுத்திருக்கேன். அதுல முக்கியமானது இந்த ‘சி.எஸ்.ஆர்.’ (CSR) நிதியைப் பயன்படுத்திச் செய்யுற சமூகப் பணிகள். அரசாங்கப் பணத்தை மட்டும் எதிர்பார்க்காம, கார்ப்பரேட் நிறுவனங்களோட உதவியோட பல நற்பணிகளைச் செஞ்சிருக்கோம்.
அதற்கு மேல் சொன்னால், நான் இன்னும் மூன்று திறன்கள் சொல்வேன். ஒன்று, நீங்கள் எவ்வளவு நேரம் செலுத்துகிறீர்கள் இந்த கவனத்தில்? முழு நேர அரசியல்வாதி என்றால் அது வேறு, பகுதி நேர அரசியல்வாதி என்றால் அது வேறு. இரண்டாவது, உங்களுக்கு சுயம்பாக என்ன திறன் இருக்கிறது? இப்ப நான் பொறியாளரா, இல்ல நான் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டரா, நான் ஒரு நிதியாளரா – இதெல்லாம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்.”
ஆனால் அதோடு முக்கியம், உங்களுக்கு என்ன கூட்டு சக்தி இருக்கிறது? என்ன உங்களுக்கு ஒரு அமைப்பு இருக்கிறது? இல்லை நீங்கள் ஒரு மாபெரும் கட்சியில் இருக்கிறீர்களா? அதில் ஒரு பெரிய வரலாறு இருக்கும், அதில் ஒரு இன்ஸ்டிடியூஷனல் நாலெட்ஜ் இருக்கும். பல வட்டச் செயலாளர்கள் இருப்பாங்க, பல நிர்வாகிகள் இருப்பாங்க. இல்லை என்னைப் பொறுத்தவரை என் குடும்ப வரலாற்றினால் எனக்கு நல்ல உறவுகள் இருக்கு, நான் போன் அடிச்சா காலேஜ்ல அட்மிஷனுக்கோ இல்ல ஏதோ ஒரு உதவிக்கோ கோயில்ல ஏதோ பண்றதுக்கோ..
இல்லை என்னைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய்… மொத்தமே நான் வந்து 15 கோடி ரூபாய் தான் தொகுதி மேம்பாட்டு நிதி. 12 கோடி ரூபாய்க்கு நான் சிஎஸ்ஆர் (CSR) வாங்கி என் தொகுதியில் பண்ணிருக்கேன். ஏன்னா நான் பெரிய எக்ஸிகியூட்டிவா இருந்தவன், அதனால ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (HDFC Bank) மாதிரி பெரிய பேங்கோட சி.இ.ஓ-க்கள், சேர்மன்கள், குளோபல் லெவல்ல பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகளோட சேர்மன், சி.இ.ஓ-க்கள் எனக்குத் தெரியும். அதனால இங்க நிறைய பண்றாங்க, அவங்களோட கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி பணத்தை வெச்சோ இல்ல வேறு வகையிலோ இங்க பண்றாங்க. இதுதான் என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல்வாதிக்கு நல்ல குணம், திறன், கெபாசிட்டி.”
எனக்கு ஏன் இந்த நபரைப் பார்த்து கொஞ்சம் வியப்பு வருதுன்னா, இவருக்கு ஊரும் கிடையாது, கொள்கையும் கிடையாது – ஒரு அஞ்சு கட்சி தாவியிருக்காங்க இவரும் இவர் மனைவியும் சேர்ந்து. இவருக்கு எந்த தத்துவமும் கிடையாது, இவருக்கு எந்த புரிதலும் கிடையாது. மக்களோட ஒரு நாள் வாழ்ந்த வரலாறு இல்லை. பல பத்து கோடி சொத்துக் காண்பிக்கிறாங்க. ஆனாலும் எனக்கு பப்ளிக்ல எங்கேயுமே நான் தேடித்தேடி பார்க்கிறேன், ஏதாவது ஒரு பொதுநலம் செஞ்சிருக்காரா? ஒரு இடத்துல உதவி செஞ்சிருக்காரா?
அவுங்க மனைவி கொரோனா காலத்துல அவங்களோட கம்பெனி அசிஸ்டன்ட்ஸ்க்கு ஏதோ உதவி செய்த மாதிரி ரொம்ப சுரண்டி சுரண்டி பார்த்தா அது வருதே தவிர, அதைத் தவிர வேற எங்கேயுமே இவங்க பொதுநலனுக்குப் பத்து ரூபாய் இல்ல ஒரு நாள் இல்ல ஒரு போராட்டம் இல்ல ஒரு கொள்கைக்காக ஒரு ஆர்ப்பாட்டம் – எதுவுமே கலந்தது இல்லை. இப்ப திடீர்னு வந்து ஓட்டு கேட்கிறாங்க. இப்ப அவர் வாயிலேயே வருது பதில். அவர் இறங்குன உடனே கேட்கிறாங்க, ‘நீங்க எதுக்கு வந்தீங்க?’ன்னு. ‘என் தலைவருக்கு இந்தத் தொகுதிதான் ஒதுக்கப்பட்டது, அதனாலதான் இந்தத் தொகுதிக்கு வந்தேன், இல்லைன்னா இந்தத் தொகுதிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது’ன்றாரு.
அடுத்தாப்ல கேட்கிறாங்க, ‘நீங்க ஜெயிச்சா என்ன பண்ணுவீங்க?’ ‘நான் 15 நாள் மதுரையில் இருப்பேன்’. அப்ப பாக்கி 15 நாள்? கொஞ்ச நேரம் கழிச்சு கேட்கிறாங்க, ‘நீங்க என்ன பண்ணுவீங்க தேர்தல்ல?’ ‘ஆ… தேர்தல் முடிவு வந்த பிறகுதான் நான் சொல்ல முடியும்’. என்ன அர்த்தம்? இது இந்த ஒன்றிய அரசாங்கம் மாதிரி – ஆரம்பிக்கும்போது 50-50, அதுக்கப்புறம் ‘நான் 20 நீ 80’, அதுக்கப்புறம் ‘நான் 10 நீ 90’, ஆனாலும் பிரதமர் பேர்தான் போடணும்ன்ற இந்த ஸ்லைடிங் ஸ்கேல் பழக்கமே இவரு பாஜக கூட்டணியில் இருக்கிறதால வந்துருச்சோ என்னமோ.
அடுத்தாப்ல கேட்கிறாங்க, ‘உங்களுக்கு மக்கள் என்ன சொல்றாங்க?’ ‘மக்கள் எல்லாம் ரொம்ப அதிருப்தியில் இருக்காங்க’. அப்படியா? எந்த மக்கள்? ‘இல்ல திருச்சி மக்கள்’ன்றார். மதுரையில் உட்கார்ந்துகிட்டு ‘திருச்சி மக்கள்’ன்றார். அதனால எனக்கு கொஞ்சம் கிண்டலா இருக்கு. அதாவது அரசியல்ல நான் வச்சிருந்த புரிதலும், இந்த நபர் ஒவ்வொரு முறை அவர் வாயைத் திறக்கும்போது சொல்றதும் அவர் செயலால் செய்யறதும் தலைகீழா இருக்கு. ஒருவேளை இவர் வந்து நிறைய ஹாரர் ஃபிலிம் டைரக்டரா இருந்ததால இவருக்கு எப்பவுமே ரிவர்ஸாதான் சிந்திக்க முடியுமோ என்னமோ…
பரவாயில்லை, என்னைப் பொறுத்தவரை கம்ஃபர்டபிளா (Comfortable) சொல்லுவேன், வேறு எந்த எம்.எல்.ஏ-வும் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 200-க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செய்ததில்லை. வேறு எந்த எம்.எல்.ஏ-வும் 12 கோடி ரூபாய் சிஎஸ்ஆர் இவ்வளவு துல்லியமாகச் செய்ததில்லை. 15,000 பேருக்குப் பட்டா வாங்கிக் கொடுத்திருக்கோம். எத்தனையோ வகை… இலங்கை அகதிகளோட பெண்கள் கல்லூரிக்குச் சேர முடியாத சூழ்நிலை, சான்றிதழ் இல்லாத சூழ்நிலையில் அவங்களுக்கு நான் காலேஜ்ல பிளேஸ்மென்ட் (Placement) கொடுத்து ஸ்காலர்ஷிப் (Scholarship) கொடுத்திருக்கேன். நேத்து ஒரு பையனைக் காமிச்சேன், அவன் ஊட்டச்சத்து கம்மியா இருந்தவனை அந்த ஸ்கூல்ல எல்லாம் சரி பண்ணப் பிறகு, அதன் மூலம் மதுரை மாநகரத்துக்கு முழுவதுமாக ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கேன் – பிரேக்ஃபாஸ்ட் எக்ஸ்பான்ஷன் (Breakfast Expansion). அதாவது மாநிலத்தில் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, என்னைக்கு என் கண்ணுக்குத் தெரிய வந்ததோ, வித்தின் 20 டேய்ஸ் (Within 20 days) அதை இம்ப்ளிமென்ட் பண்ணிட்டோம்.
கேள்வி: எதிர்க்கட்சிகள் நீங்க ஒரு ‘கார்ப்பரேட் அரசியல்வாதி’ அப்படின்னு விமர்சனம் வைக்கிறாங்களே, அதை எப்படிப் பார்க்கிறீங்க?
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்:கார்ப்பரேட் அப்படின்னா என்ன? ஒரு ஒழுக்கம், ஒரு சிஸ்டம் (System), ஒரு அக்கவுண்டபிலிட்டி (Accountability)… இதெல்லாம் இருந்தா அது கார்ப்பரேட்னா, ஆமா நான் அப்படித்தான் செயல்படுறேன். நான் முன்னாடியே சொன்ன மாதிரி, நான் பெரிய நிறுவனங்கள்ல உயரிய பதவிகள்ல இருந்தவன். அங்க நான் கத்துக்கிட்ட அந்த நிர்வாகத் திறனை மக்களுக்காகப் பயன்படுத்துறேன். இதுல என்ன தப்பு இருக்கு?
மக்களுக்குத் தேவை வேலை நடக்கணும், அவங்க கஷ்டம் தீரணும். அதை நான் முறைப்படி செய்யுறேன். நான் கொண்டு வர்ற ஒவ்வொரு திட்டமும் வெளிப்படையா இருக்கும். அதனாலதான் என்னால தைரியமா வெள்ளை அறிக்கை விட முடியுது. இந்த விமர்சனங்கள் எல்லாம் என்னோட வளர்ச்சியைப் பார்த்துப் பயப்படுறவங்க வைக்கிறதுதான். மக்கள் இதை ஏத்துக்கல, அவங்களுக்குத் தெரியும் நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு.
கேள்வி: மதுரை மத்திய தொகுதியில நீங்க பண்ண மாற்றங்கள், குறிப்பாக அந்த சி.எஸ்.ஆர் (CSR) ஃபண்ட் பத்தி சொன்னீங்க. ஆனா, மதுரை ஃபுல்லா இப்போ ஒரு பெரிய கம்ப்ளைன்ட் (Complaint) இருக்கு… தோண்டாத ரோடே இல்ல, பாதாள சாக்கடை பிரச்சனை பெருசா இருக்குன்னு. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: அது நியாயமான கேள்விதான். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அது ஏன் அப்படின்னு நம்ம கொஞ்சம் ஆழமா பார்க்கணும். நான் நிதியமைச்சரா இருந்தப்போதான் இதுக்காக தனியா நிதி ஒதுக்கி, ஒரு முழுமையான திட்டத்தை (Comprehensive plan) தயார் பண்ணச் சொன்னேன். இப்போ அந்த வேலைகள் நடந்துட்டு இருக்கு.
ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடக்கும்போது வலி இருக்கத்தான் செய்யும். அதே மாதிரிதான் இந்தத் திட்டமும். ஒரு 50 வருஷத்துக்கான தீர்வை நோக்கி நாங்க போயிட்டு இருக்கோம். அதனாலதான் இப்போ ரோடு தோண்டப்படுது, வேலைகள் நடக்குது. இதை நாங்க அரைகுறையா பண்ண விரும்பல. மக்கள் படுற கஷ்டம் எனக்குத் தெரியுது, ஆனா இது முடிஞ்சதுக்கு அப்புறம் மதுரை ஒரு நவீன நகரமா மாறும்.
கேள்வி: இப்போ இந்தத் தேர்தல் களம்… மதுரை மத்திய தொகுதியில உங்களுக்குப் போட்டியா இருக்குறவங்கள எப்படிப் பார்க்குறீங்க? குறிப்பா எதிர்க்கட்சிகள் ரொம்பத் தீவிரமா வேலை செய்யுறாங்களே?
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: தேர்தல்ல போட்டி இருக்கத்தான் செய்யும். ஜனநாயகத்துல அது ரொம்ப ஆரோக்கியமானது. ஆனா, நான் மத்தவங்கள பத்திப் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பல. நான் என்ன பண்ணிருக்கேன், என் தொலைநோக்குத் திட்டம் என்னங்கிறத மக்கள்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.
மதுரை மத்திய தொகுதி மக்கள் விவரமானவங்க. அவங்களுக்குத் தெரியும், யார் வந்து வெறும் பேச்சு பேசுறாங்க, யார் நிஜமாவே வேலை செய்யுறாங்கன்னு. நான் முன்னாடியே சொன்ன மாதிரி, என்கிட்ட இருக்குற அந்த நாலு பண்புகளையும் மக்கள் கவனிச்சுட்டுதான் இருக்காங்க. எதிர்க்கட்சிகள் வைக்கிற விமர்சனங்களுக்குத் தேர்தல்ல மக்கள் சரியான பதில் சொல்லுவாங்க. எனக்குத் தொகுதி மக்கள் மேல முழு நம்பிக்கை இருக்கு.
கேள்வி: நீங்கள் ஒரு சர்வதேச வங்கியாளர் (International Banker). உலக அளவில் பெரிய பதவிகளில் இருந்தவர். இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருக்கும்போது அந்த உலகளாவிய பார்வை உங்களுக்கு எப்படி உதவுகிறது? குறிப்பாக மதுரை போன்ற ஒரு பாரம்பரியமான நகரத்தை நவீனப்படுத்தும்போது?
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: நிச்சயமாக அது ஒரு பெரிய பலம். உலக அளவில் பல நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக முறைகளை நான் நேரிலேயே பார்த்தவன். அது எனக்கு ஒரு பெரிய புரிதலைக் கொடுத்திருக்கு. மதுரையைப் பொறுத்தவரை, இது வெறும் பழமையான நகரம் மட்டுமல்ல, இது நம் பண்பாட்டின் அடையாளம்.
நவீனப்படுத்துதல் என்பது அதன் பழமையைச் சிதைப்பது அல்ல, மாறாக அதன் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது. உதாரணமாக, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவது குறித்து நான் அடிக்கடி பேசுவேன். உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மதுரையை மாற்ற வேண்டுமானால், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், தூய்மையைப் பராமரிப்பதும் மிக முக்கியம். இதைச் செய்யும்போது சர்வதேச அளவில் கையாளப்படும் ‘Urban Planning’ (நகரக் கட்டமைப்புத் திட்டம்) முறைகளை நாம் இங்கே கொண்டு வர முடியும்.”
கேள்வி: இன்னொரு விஷயம் சார், நீங்க எப்போதுமே ஒரு ‘டேட்டா-டிரிவன்’ (Data-driven) ஆளாக இருக்கீங்க. அரசியலில் உணர்ச்சிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுவதுண்டு. தரவுகளை வைத்து அரசியல் செய்வது சாத்தியமா?
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்: ஏன் சாத்தியமில்லை? உணர்ச்சிகள் ஒரு தேர்தலை வெல்ல உதவலாம், ஆனால் தரவுகள் மட்டும்தான் ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும். ஒரு வார்டில் எத்தனை பேருக்குக் குடிநீர் இணைப்பு இல்லை, எத்தனை சாலைகள் பழுதடைந்துள்ளன என்ற துல்லியமான தகவல் இல்லாமல் நீங்கள் எப்படித் திட்டமிட முடியும்?
நான் அரசியலுக்கு வந்ததே நிர்வாகத்தைச் சீரமைக்கத்தான். வெளிப்படைத்தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக்கூறல் (Accountability) – இவை இரண்டும் இருந்தால் எந்த ஒரு அமைப்பையும் சிறப்பாக நடத்த முடியும். நான் வெளியிடும் அறிக்கைகள் எல்லாம் தரவுகளின் அடிப்படையில் இருப்பவை. அதனால்தான் என்னால் யாராக இருந்தாலும் தைரியமாக விவாதிக்க முடிகிறது.
20 நாடுகளையும் நான் பார்த்திருக்கேன், அங்கங்க என்னென்ன மேலாண்மைத் திட்டம் இருக்கு, என்னென்ன அரசாங்கம் மாடல் இருக்கு. அதுக்காகவே ரெண்டு பசங்களையும் நான் சொல்லிருக்கேன். ரெண்டு பசங்க… என் வைஃப் அமெரிக்கன் இருந்ததுனால என் ரெண்டு பசங்களுக்கு ஓரளவுக்கு அமெரிக்கா தெரியும், இந்தியா தெரியும், சிங்கப்பூர் தெரியும்… என்னென்ன பெரிய பேங்க் எம்.டி.-யா இருந்தேன், அவங்க வந்துட்டு போயிருப்பாங்க.
அதனால நான் ரெண்டு பசங்ககிட்டயும் சொன்னேன், நீ வேற எங்கயாவது ஒரு நாட்டுல போய் படிங்க, அப்போ இன்னும் உங்களுக்கு விரிவான புரிதல் இருக்கும். இந்த சமுதாயம், இந்த சமுதாயம், இந்த சட்ட அமைப்பு, இந்த சட்ட அமைப்பு… இன்னொன்னு ஒப்பிட்டுப் பார்க்கும்போது உங்களுக்கு உலகளாவிய புரிதல் வரும்னு சொன்னேன். அதனால மூத்த பையன் இப்போ ஆஸ்திரேலியாவில படிக்கிறாப்ல. ஓ… அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், இப்போ ஆஸ்திரேலியா. இளைய பையன் லண்டன்ல போய் படிக்கப்போறான். அதனால இன்னொரு நாடு, இன்னொரு கலாச்சாரம். வி ஆர் பிகமிங் குளோபல் சிட்டிசன்ஸ் (We are becoming global citizens).
அதனால இது என்ன சொல்லுவாங்க? ‘திங்க் குளோபலி, ஆக்ட் லோக்கலி’ (Think globally, act locally). இதெல்லாம் படிச்சுக்கிட்டு அதைக் கொண்டு வந்து இங்க செயல்படுத்துறது மதுரை மண்ணின் மைந்தருடைய கடமை, அதை நான் செஞ்சிட்டு இருக்கேன். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பேட்டி:
