Tamil Nadu Election Results 2026 Live Update
17-வது தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மே 4-ந் தேதி எண்ணப்பட்டு வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்.
- இரவு 10.47 நிலவரம்: தவெக 107; திமுக 60; அதிமுக 47; காங்கிரஸ் 5; பாமக 4, முஸ்லிம் லீக் 2, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 2, தேமுதிக 1, பாஜக 1, அமமுக 1
- மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்- ஸ்டாலின்
“கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.”- மு.க.ஸ்டாலின் - முடிவு அறிவிக்கப்பட்ட தவெக வென்ற தொகுதிகள்- 73
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர்
பூந்தமல்லி
மாதவரம் - திருவொற்றியூர்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திரு.வி.க. நகர்
எழும்பூர்
ராயபுரம்
ஆயிரம் விளக்கு
அண்ணா நகர்
விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தியாகராய நகர்
மயிலாப்பூர்
வேளச்சேரி
தாம்பரம்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்
அரக்கோணம்
ராணிப்பேட்டை
வேலூர்
கீழ்வைத்தினாங்குப்பம்
குடியாத்தம்
ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி
பென்னாகரம்
கள்ளக்குறிச்சி
சேலம் (மேற்கு)
சேலம் (வடக்கு)
சேலம் (தெற்கு)
வீரபாண்டி
ராசிபுரம்
சேந்தமங்கலம்
திருச்செங்கோடுஈரோடு (கிழக்கு)
ஈரோடு (மேற்கு)
மொடக்குறிச்சி
கோபிச்செட்டிப்பாளையம்
பவானிசாகர்
அவினாசி
திருப்பூர் (தெற்கு)
பல்லடம்
கவுண்டம்பாளையம்
கிணத்துக்கடவு
நிலக்கோட்டை
மணப்பாறை
திருவெறும்பூர்
முசிறி
துறையூர்
பெரம்பலூர்
கடலூர்
தஞ்சாவூர்
அறந்தாங்கி
மதுரை (கிழக்கு)
சோழவந்தான்
மதுரை (வடக்கு)
மதுரை (தெற்கு)
மதுரை (மத்தியம்)
மதுரை (மேற்கு)
உசிலம்பட்டி
பெரியகுளம்
ராஜபாளையம்
சிவகாசி
திருவாடானை
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்
ஒட்டப்பிடாரம்
திருநெல்வேலி
நாங்குநேரி
ராதாபுரம் - முடிவு அறிவிக்கப்பட்ட திமுக வென்ற தொகுதிகள்- 39
துறைமுகம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
வேப்பனஹள்ளி
வந்தவாசி
விழுப்புரம்
கூடலூர்
குன்னூர்
கோயம்புத்தூர் (தெற்கு)
பொள்ளாச்சி
வால்பாறை
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம்
ஒட்டன்சத்திரம்
ஆத்தூர்
திண்டுக்கல்
வேடசந்தூர்
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
மண்ணச்சநல்லூர்
குன்னம்
குறிஞ்சிப்பாடி
சீர்காழி
நாகப்பட்டினம்
திருவாரூர்
திருவிடைமருதூர்
ஒரத்தநாடு
பட்டுக்கோட்டை
புதுக்கோட்டை
ஆலங்குடி
திருமங்கலம்
ஆண்டிபட்டி
அருப்புக்கோட்டை
பரமக்குடி
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
திருச்செந்தூர்
கடையநல்லூர்
ஆலங்குளம்
பாளையங்கோட்டை - முடிவு அறிவிக்கப்பட்ட அதிமுக வென்ற தொகுதிகள்-30
செய்யூர்
மதுராந்தகம்
ஆற்காடு
அணைக்கட்டு
ஜோலார்பேட்டை
ஓசூர்
பாலக்கோடு
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர்
கீழ்பென்னாத்தூர்
செய்யாறு
மயிலம்
கெங்கவல்லி
ஆத்தூர்
ஏற்காடு
ஓமலூர்
எடப்பாடி
சங்ககிரி
தாராபுரம்
பெருந்துறை
பவானி
அந்தியூர்
நத்தம்
அரியலூர்
நெய்வேலி
பண்ருட்டி
வேதாரண்யம்
நன்னிலம்
சங்கரன்கோவில்
அம்பாசமுத்திரம்
முடிவு அறிவிக்கப்பட்ட பாமக வென்ற தொகுதிகள் -2
தருமபுரி
ஜெயங்கொண்டம் - முடிவு அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வென்ற தொகுதிகள்- 2
மேலூர்
விளவங்கோடு - முஸ்லிம் லீக் வென்ற தொகுதிகள்
வாணியம்பாடி
பாபநாசம் - முடிவு அறிவிக்கப்பட்ட சிபிஐ வென்ற தொகுதி
திருத்துறைப்பூண்டி - முடிவு அறிவிக்கப்பட்ட சிபிஎம் வென்ற தொகுதி
கீழ்வேளூர்
பத்மநாபபுரம்\ - முடிவு அறிவிக்கப்பட்ட பாஜக வென்ற தொகுதி
உதகமண்டலம் - முடிவு அறிவிக்கப்பட்ட அமமுக வென்ற தொகுதி
மன்னார்குடி - முடிவு அறிவிக்கப்பட்ட தேமுதிக வென்ற தொகுதி
விருத்தாசலம் - முடிவு அறிவிக்கப்பட்ட விசிக வென்ற தொகுதி
காட்டுமன்னார்கோவில் - கோவில்பட்டியில் அதிமுக கடம்பூர் ராஜூ தோல்வி
- சிவகங்கையில் தவெக வெற்றி
- அவிநாசி, தூத்துக்குடியில் தவெக வெற்றி
- வாணியம்பாடியில் முஸ்லிம் லீக் வெற்றி
- நாகையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா வெற்றி
- பரமக்குடியில் திமுக அட்வகேட் கதிரவன் வெற்றி
- மன்னார்குடியில் அமமுக காமராஜ் வெற்றி
- ஜோலார்பேட்டையில் அதிமுக கே.சி.வீரமணி வெற்றி
- மயிலத்தில் அதிமுக சி.வி.சண்முகம் வெற்றி
- சேலம் ஆத்தூரில் அதிமுக ஜெயசங்கரன் வெற்றி
- தாராபுரத்தில் அதிமுக சத்யபாமா வெற்றி
- அந்தியூரில் அதிமுக ஹரிபாஸ்கர் வெற்றி
- பண்ருட்டியில் அதிமுக மோகன் வெற்றி
- வேளச்சேரியில் தவெக குமார் வெற்றி
- அரக்கோணத்தில் தவெக காந்திராஜ் வெற்றி
- ராணிப்பேட்டையில் தவெக தாஹிரா வெற்றி
- சேலம் தெற்கில் விஜய் தமிழன் பார்த்திபன் வெற்றி
- ஜெயங்கொண்டத்தில் பாமக வைத்திலிங்கம் வெற்றி
- பல்லடத்தில் தவெக ராம்குமார் வெற்றி
- எழும்பூரில் தவெக ராஜ்மோகன் வெற்றி
- ஆலங்குடியில் திமுகவின் சிவ.வி.மெய்யநாதன் 12,977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- விளாத்திகுளத்தில் திமுகவின் மார்க்கண்டேயன் 8228 வாக்குகளில் வெற்றி
- ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்
- பாப்பிரெட்டிபட்டியில் அதிமுக 33,114 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- மதுராந்தகத்தில் அதிமுக, 7194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- ஒட்டன்சத்திரத்தில் 43,249 வாக்குகள் வித்தியாசத்தில் அர. சக்கரபாணி வெற்றி; தற்போதுவரை திமுகவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அர.சக்கரபாணி.
- அரூரில் அதிமுக 3,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- அந்தியூரில் அதிமுக 1260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- ராமநாதபுரத்தில் திமுகவின் காதர்பாட்சா முத்துராமலிங்கம் 12,459 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- வில்லிவாக்கத்தில் தவெக ஆதவ் அர்ஜூனா 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- பொள்ளாச்சி கொமதேக நித்தியானந்தன், 4627 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- திருவிடைமருதூரில் திமுக கோவி.செழியன் 14,116 வாக்குகளில் வெற்றி
- துறையூரில் 9614 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி
- அரியலூரில் அதிமுக ராஜேந்திரன் 24,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; தவெகவுக்கு 3வது இடம்.
- திருச்செந்தூரில் திமுக அனிதா ராதாகிருஷ்ணன் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- ராஜபாளையத்தில் தவெக 10,606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- மதுரை கிழக்கில் தவெகவின் கார்த்திகேயன் 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; திமுக பி.மூர்த்தி 2-வது இடம்.
- ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக ஜேசிடி பிரபாகர் 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. அதிமுகவின் வளர்மதிக்கு 3-வது இடம்.
- மதுரையில் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தோல்வி; அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட திரைப்பட இயக்குநர் சுந்தர் சி.க்கு 3-வது இடம்
- உத்திரமேரூரில் 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி.
- மொடக்குறிச்சியில் 2,430 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி
- கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி; தவெகவின் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி.
- துறைமுகத்தில் திமுகவின் சேகர்பாபு 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- உதகமண்டலத்தில் பாஜகவின் போஜராஜன் 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- நன்னிலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் 41,724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- மதுரை வடக்கு தொகுதியில் தவெகவின் கல்லாணை 18,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- செய்யாறில் அதிமுகவின் முக்கூர் சுப்பிரமணியன் 21,081 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தோல்வி. தவெகவின் விஜய் தாமு 14249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை; அதிமுக டி.ஜெயக்குமாருக்கு 3-வது இடம்.
- பூவிருந்தவல்லியில் தவெகவின் பிரகாசம் 72,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- மாதவரத்தில் தவெகவின் விஜய் பிரபு 94,965 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- அறந்தாங்கியில் தவெகவின் முகமது பர்வாஸ் 10,062 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- அறந்தாங்கி, மாதவரம், பூவிருந்தவல்லியில் தவெக வெற்றி
- தேர்தல் ஆணையம் வெளியிட்ட 31 தொகுதிகளின் முடிவுகளில் தவெக 18;; திமுக8 ; அதிமுக 3; காங்கிரஸ் 1; சிபிஐ 1-ல் வெற்றி
- வேதாரண்யத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் 7331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- பவானிசாகரில் தவெக தமிழ்ச்செல்வி 4,569 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- ராசிபுரத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 14,511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- திருத்துறைப்பூண்டியில் சிபிஐ மாரிமுத்து 12,922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- மண்ணச்சநல்லூரில் திமுகவின் கதிரவன் 12,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- தி.நகர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 13,027 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
- செய்யூரில் அதிமுகவின் ராஜசேகர் 5668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
- அம்பாசமுத்திரத்தில் அதிமுகவின் இசக்கி சுப்பையா 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
- கவுண்டம்பாளையத்தில் தவெகவின் கனிமொழி 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தவெகவின் விஜய் பாலாஜி 23,966 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- திருவாரூரில் திமுகவின் பூண்டி கலைவாணன் 18,148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- சேந்தமங்கலத்தில் தவெக சந்திரசேகர் 2,655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- மயிலாப்பூரில் தவெக வெங்கட்ரமணன் 28,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 3-வது இடம்
- முசிறியில் தவெக விக்னேஷ் 17,442 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- தற்போதைய நிலவரப்படி வாக்கு சதவீதம்
தவெக 34.79%
திமுக 24.15%
அதிமுக 21.48%
காங்கிரஸ் 3.50%
பாஜக 3.03%
தேமுதிக 1.14%
விசிக 1.06% - பத்மநாபபுரம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி வெற்றி
- கீழ்வேளூர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் டி.லதா வெற்றி
- ஸ்ரீவைகுண்டத்தில் தவெக சரவணன் 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- நாங்குநேரியில் தவெகவின் ரெட்டியார்பட்டி நாராயணன் 16,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
- ராதாபுரத்தில் தவெகவின் டாக்டர் சதீஷ் கிறிஸ்டோபர் 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- கோபிசெட்டிப்பாளையத்தில் தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- திருநெல்வேலியில் தவெகவின் முருகன் 11, 414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- உடுமலைப்பேட்டையில் திமுகவின் ஜெயக்குமார் 2,882 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
- திருச்சி (மேற்கு) தொகுதியில் கே.என்.நேரு 4,786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- பாளையங்கோட்டையில் திமுகவின் அப்துல் வஹாப் 13,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- அண்ணா நகரில் தவெக ராம்குமார் 21,363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- திருவிக நகரில் தவெக வேட்பாளர் பல்லவி 22, 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- தஞ்சாவூரில் தவெக 16,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விஜய் சரவணன் (தவெக) 87705
சண் ராமநாதன் (திமுக) 70750
கருப்பு முருகானந்தம் (பாஜக) 26790 - வால்பாறையில் திமுக 9,371 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
குட்டி என்ற சுதாகர் (திமுக) 54,671
ஸ்ரீதரன் (தவெக) 45,300
லட்சுமண சிங் (அதிமுக) 43,728
- குன்னூரில் திமுக 8,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
எம்.ராஜூ (திமுக) 50,470
ராமு (அதிமுக) 42,371
தங்கராஜூ (தவெக) 42,225 - அதிமுக முன்னிலை எண்ணிக்கை 50 ஆக குறைந்தது
- திமுக 1 இடத்தில் வெற்றி; 59 தொகுதிகளில் முன்னிலை
- தேமுதிக 1; விசிக 1; சிபிஎம் 1; அமமுக 1-ல் முன்னிலை
- முஸ்லிம் லீக் 2; பாஜக 2 சிபிஐ 2 தொகுதிகளில் முன்னிலை
- பாமக 4 தொகுதிகளில் முன்னிலை
- அதிமுக 51 தொகுதிகளில் முன்னிலை
- காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி; 4 தொகுதிகளில் முன்னிலை
- திமுக 1 இடத்தில் வெற்றி; 58 தொகுதிகளில் முன்னிலை
- மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் எம்.பி. காஞ்சிபுரம் விஸ்வநாதன், 2,724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
விஸ்வநாதன் (காங்கிரஸ்)- 60,080
மதுரை வீரன் (தவெக) – 57,356
பெரியபுள்ளான் (அதிமுக) – 56,744
கோட்டைகுமார் (நாதக)- 9,570
சோனிய காந்தி (சசிகலா கட்சி) 2,628 - கூடலூர் தொகுதியில் திமுகவின் திராவிட மணி 22,833 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திராவிடமணி (திமுக) – 65,590
பொன். ஜெயசீலன் (அதிமுக) 42,757
தீபக் சாய் கிஷோர் (தவெக) 34,962
கார்த்திக் (நாதக) 6,199 - திமுக 2-வது இடத்துக்கு முன்னேறியது; 56 தொகுதிகளில் திமுக முன்னிலை
- பகல் 2 மணி முன்னிலை நிலவரம்:
234 தொகுதிகளில்
தவெக 110
அதிமுக 59
திமுக 48
பாமக- 5
காங்கிரஸ் 4
சிபிஐ 2
முஸ்லிம் லீக் 1
சிபிஎம் -1
அமமுக 1
விசிக 1
தேமுதிக 1
பாஜக 1 - திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- விஜய்-க்கு நேரில் வந்து வாழ்த்து சொன்ன நடிகை திரிஷா
- தற்போதைய நிலவரப்படி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்-1
வாணியம்பாடி - அமமுக-1
மன்னார்குடி - சிபிஐ முன்னிலை 2
திருத்துறைப்பூண்டி
ஸ்ரீவில்லிப்புத்தூர் - விசிக முன்னிலை- 2
பண்ருட்டி
காட்டுமன்னார்கோவில் - தேமுதிக முன்னிலை-2
விருத்தாசலம்
விருதுநகர் - சிபிஎம் முன்னிலை
பத்மநாபபுரம்
பழனி
பாஜக முன்னிலை வகிக்கும் 2 தொகுதிகள்
தளி
உதகமண்டலம் - காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் 5 தொகுதிகள்
கடலூர்
மயிலாடுதுறை
திருவாடானை
குளச்சல்
விளவங்கோடு - பாமக முன்னிலை வகிக்கும் 5 தொகுதிகள்
பென்னாகரம்
தருமபுரி
செஞ்சி
விக்கிரவாண்டி
ஜெயங்கொண்டம் - திமுக முன்னிலை வகிக்கும் 44 தொகுதிகள்
துறைமுகம்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
ராணிப்பேட்டை
வேலூர்
விழுப்புரம்
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்
பரமத்தி-வேலூர்
கூடலூர்
குன்னூர்
மேட்டுப்பாளையம்
கோயம்புத்தூர் (தெற்கு)
வால்பாறை
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம்
ஒட்டன்சத்திரம்
ஆத்தூர்
நிலக்கோட்டை
வேடசந்தூர்
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
திருவெறும்பூர்
மண்ணச்சநல்லூர்
குன்னம்
திட்டக்குடி
சீர்காழி
நாகப்பட்டினம்
திருவாரூர்
திருவிடைமருதூர்
கும்பகோணம்
திருவையாறு
ஒரத்தநாடு
பட்டுக்கோட்டை
திருமயம்
ஆலங்குடி
திருப்பத்தூர்
திருமங்கலம்
போடிநாயக்கனூர்
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
கோவில்பட்டி
வாசுதேவநல்லூர்
தென்காசி
கன்னியாகுமரி - அதிமுக முன்னிலை வகிக்கும் 64 தொகுதிகள்
திருத்தணி
செய்யூர்
மதுராந்தகம்
காஞ்சிபுரம்
காட்பாடி
ஆற்காடு
அணைக்கட்டு
ஜோலார்பேட்டை
வேப்பனஹள்ளி
ஓசூர்
பாலக்கோடு
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர்
செங்கம்
கீழ்பென்னாத்தூர்
கலசப்பாக்கம்
ஆரணி
செய்யாறு
வந்தவாசி
மைலம்
திண்டிவனம்
வானூர்
திருக்கோவிலூர்
உளுந்தூர்பேட்டை
கெங்கவல்லி
ஆத்தூர்
ஏற்காடு
ஓமலூர்
மேட்டூர்
எடப்பாடி
வீரபாண்டி
சேந்தமங்கலம்
நாமக்கல்
தாராபுரம்
காங்கேயம்
பெருந்துறை
பவானி
அந்தியூர்
பவானிசாகர்
தொண்டாமுத்தூர்
பொள்ளாச்சி
பழனி
நத்தம்
கரூர்
லால்குடி
அரியலூர்
நெய்வேலி
குறிஞ்சிப்பாடி
புவனகிரி
சிதம்பரம்
பூம்புகார்
வேதாரண்யம்
நன்னிலம்
பாபநாசம்
பேராவூரணி
விராலிமலை
மேலூர்
ஆண்டிபட்டி
சிவகாசி
ஸ்ரீவைகுண்டம்
சங்கரன்கோவில்
கடையநல்லூர்
ஆலங்குளம்
அம்பாசமுத்திரம் - தவெக முன்னிலை வகிக்கும் 105 தொகுதிகள்
கும்மிடிப்பூண்டி
பொன்னேரி
திருவள்ளூர்
பூந்தமல்லி
ஆவடி
மதுரவாயல்
அம்பத்தூர்
மாதவரம்
திருவொற்றியூர்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
பெரம்பூர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திரு.வி.க. நகர்
எழும்பூர்
ராயபுரம்
ஆயிரம் விளக்கு
அண்ணா நகர்
விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தியாகராய நகர்
மயிலாப்பூர்
வேளச்சேரி
சோழிங்கநல்லூர்
ஆலந்தூர்
ஸ்ரீபெரும்புதூர்
பல்லாவரம்
தாம்பரம்
செங்கல்பட்டு
திருப்போரூர்
உத்திரமேரூர்
அரக்கோணம்
சோளிங்கர்
கீழ்வைத்தியனான்குப்பம்
குடியாத்தம்
ஆம்பூர்
திருப்பத்தூர்
ஊத்தங்கரை
பர்கூர்
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
போளூர்
விக்கிரவாண்டி
கள்ளக்குறிச்சி
சேலம் (மேற்கு)
சேலம் (வடக்கு)
சேலம் (தெற்கு)
ராசிபுரம்
திருச்செங்கோடு
குமாரபாளையம்
ஈரோடு (கிழக்கு)
ஈரோடு (மேற்கு)
மொடக்குறிச்சி
காங்கேயம்
கோபிசெட்டிபாளையம்
அவினாசி
திருப்பூர் (வடக்கு)
திருப்பூர் (தெற்கு)
பல்லடம்
சூலூர்
கவுண்டம்பாளையம்
கோயம்புத்தூர் (வடக்கு)
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
திண்டுக்கல்
அரவக்குறிச்சி
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை
மணப்பாறை
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
முசிறி
துறையூர்
பெரம்பலூர்
கீழ்வேளூர்
தஞ்சாவூர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
மதுரை கிழக்கு
சோழவந்தான்
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மத்தி
மதுரை மேற்கு
திருப்பரங்குன்றம்
உசிலம்பட்டி
பெரியகுளம்
கம்பம்
ராஜபாளையம்
சாத்தூர்
அருப்புக்கோட்டை
திருச்சுழி
பரமக்குடி
தூத்துக்குடி
திருச்செந்தூர்
ஒட்டப்பிடாரம்
திருநெல்வேலி
பாளையங்கோட்டை
நாங்குநேரி
ராதாபுரம்
கிள்ளியூர் - 234 தொகுதிகளில்
தவெக 105
அதிமுக 64
திமுக 44
பாமக 4
காங்கிரஸ் 5
பாஜக 3
தேமுதிக 2
விசிக 2
சிபிஐ 2
அமமுக 1
முஸ்லிம் லீக் 1
சிபிஎம் 1 முன்னிலை - 233 தொகுதிகளில் தவெக 108-ல் முன்னிலை
- விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
- 233 தொகுதிகளில் 107 இடங்களில் தவெக முன்னிலை. அதிமுக 64; திமுக 41; பாமக 6;
- 232 தொகுதிகளின் முன்னிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது; இதில் தவெக 104 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. இன்னும் 2 தொகுதிகளில் முன்னிலை வெளியாக வேண்டும்; பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 118 இடங்கள். தற்போதைய நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமையக் கூடிய நிலை உருவாகி உள்ளது.
- தவெக 103; அதிமுக 67; திமுக 38; பாமக- 7; காங்கிரஸ் 3; சிபிஐ 2; சிபிஎம் 2
- பாமக முன்னிலை தொகுதிகள்
சோளிங்கர்
பென்னாகரம்
தருமபுரி
செஞ்சி
விக்கிரவாண்டி
ஜெயங்கொண்டம்
மயிலாடுதுறை - தவெக 101 இடங்களில் முன்னிலை
- கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்கோவிலில் விசிக முன்னிலை
- பெரும்பான்மைக்கு தேவை 118; தற்போது தவெக 99 இடங்களில் முன்னிலை
- தவெக 99, அதிமுக 66, திமுக 37, பாமக 7, சிபிஐ 2, காங்கிரஸ் 3, விசிக 2-ல் முன்னிலை
- தவெக 97, அதிமுக 66, திமுக 35, பாமக 7, சிபிஐ 2, காங்கிரஸ் 3, விசிக 2-ல் முன்னிலை
- தவெக 98, அதிமுக 61, திமுக 35, பாமக 6, சிபிஐ 2, காங்கிரஸ் 2, பாஜக 1-ல் முன்னிலை
- திமுக முன்னிலை தொகுதிகள்
அணைக்கட்டு
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்
பரமத்தி-வேலூர்
அந்தியூர்
கூடலூர்
குன்னூர்
கோயம்புத்தூர் (தெற்கு)
வால்பாறை
மடத்துக்குளம்
ஒட்டன்சத்திரம்
வேடசந்தூர்
மண்ணச்சநல்லூர்
குன்னம்
திட்டக்குடி
சீர்காழி
மன்னார்குடி
திருவாரூர்
கும்பகோணம்
திருவையாறு
ஒரத்தநாடு
ஆலங்குடி
திருப்பத்தூர்
மதுரை கிழக்கு
திருமங்கலம்
போடிநாயக்கனூர்
பரமக்குடி
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
கன்னியாகுமரி
நாகர்கோவில் - தவெக 90, அதிமுக 61, திமுக 34, பாமக 6, பாஜக 2, விசிக-1, சிபிஐ 1, தேமுதிக 1-ல் முன்னிலை
- அதிமுக 61-ல் முன்னிலை
செய்யூர்
காஞ்சிபுரம்
காட்பாடி
குடியாத்தம்
வாணியம்பாடி
வேப்பனஹள்ளி
ஓசூர்
பாலக்கோடு
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர்
கீழ்பென்னாத்தூர்
கலசப்பாக்கம்
ஆரணி
செய்யாறு
வந்தவாசி
மயிலம்
விழுப்புரம்
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி
கெங்கவல்லி
சேலம் ஆத்தூர்
ஏற்காடு
ஓமலூர்
மேட்டூர்
எடப்பாடி
சங்ககிரி
வீரபாண்டி
நாமக்கல்
தாராபுரம்
பெருந்துறை
பவானி
பவானிசாகர்
சூலூர்
பொள்ளாச்சி
உடுமலைப்பேட்டை
பழனி
நத்தம்
அரவக்குறிச்சி
கிருஷ்ணராயபுரம்
மணப்பாறை
லால்குடி
அரியலூர்
நெய்வேலி
பண்ருட்டி
கடலூர்
குறிஞ்சிப்பாடி
புவனகிரி
சிதம்பரம்
வேதாரண்யம்
நன்னிலம்
திருவிடைமருதூர்
பாபநாசம்
பட்டுக்கோட்டை
பேராவூரணி
விராலிமலை
ஆண்டிபட்டி
திருவாடானை
ஸ்ரீவைகுண்டம்
கடையநல்லூர்
தென்காசி
ஆலங்குளம் - 83 தொகுதிகளில் தவெக முன்னிலை
- தவெக முன்னிலை வகிக்கும் 79 தொகுதிகள்:
பொன்னேரி
திருவள்ளூர்
பூந்தமல்லி
ஆவடி
அம்பத்தூர்
மாதவரம்
திருவொற்றியூர்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
பெரம்பூர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திரு.வி.க. நகர்
எழும்பூர்
ராயபுரம்
துறைமுகம்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
அண்ணா நகர்
விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தியாகராய நகர்
மயிலாப்பூர்
ஆலந்தூர்
ஸ்ரீபெரும்புதூர்
பல்லாவரம்
தாம்பரம்
செங்கல்பட்டு
திருப்போரூர்
மதுராந்தகம்
உத்திரமேரூர்
அரக்கோணம்
ராணிப்பேட்டை
வேலூர்
கீழ்வைத்தியனான்குப்பம்
ஆம்பூர்
ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
சங்ககிரி
சேலம் (வடக்கு)
சேலம் (தெற்கு)
ராசிபுரம்
சேந்தமங்கலம்
திருச்செங்கோடு
ஈரோடு (மேற்கு)
மொடக்குறிச்சி
காங்கேயம்
கோபிச்செட்டிப்பாளையம்
அவினாசி
திருப்பூர் (வடக்கு)
திருப்பூர் (தெற்கு)
பல்லடம்
கவுண்டம்பாளையம்
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
திண்டுக்கல்
குளித்தலை
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
முசிறி
துறையூர்
விருத்தாச்சலம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி
சிவகங்கை
சோழவந்தான்
மதுரை வடக்கு
மதுரை மத்தி
திருப்பரங்குன்றம்
உசிலம்பட்டி
தூத்துக்குடி
கோவில்பட்டி
சங்கரன்கோவில்
திருநெல்வேலி
பாளையங்கோட்டை
நாங்குநேரி
ராதாபுரம்
கிள்ளியூர் - தவெக 73; அதிமுக 54; திமுக 29; காங்கிரஸ் 5; பாஜக-1; பாமக 4; சிபிஐ1
- தவெக 71; அதிமுக 52; திமுக 29; காங்கிரஸ் 5; பாஜக-1; பாமக3; சிபிஐ1
- தவெக 68; அதிமுக 51; திமுக 28; காங்கிரஸ் 5; பாஜக-1; பாமக3; சிபிஐ1
- தவெக 47; அதிமுக 44; திமுக 20; காங்கிரஸ் 2; பாஜக-1; பாமக2; தேமுதிக 1
- தவெக 45; அதிமுக 41; திமுக 19; காங்கிரஸ் 2; பாஜக-1; பாமக2; தேமுதிக 1;
- தவெக 38; அதிமுக 36; திமுக 19; காங்கிரஸ் 2; பாஜக-1; பாமக2; தேமுதிக 1;
- அதிமுக 32; தவெக 28; திமுக 14; காங்கிரஸ் 2; பாஜக-1; பாமக1; தேமுதிக 1;
- தவெக முன்னிலை தொகுதிகள்:
மாதவரம்
திருவொற்றியூர்
கொளத்தூர்
எழும்பூர்
கே.வி.குப்பம்
ஆம்பூர்
ஊத்தங்கரை
மொடக்குறிச்சி
காங்கேயம்
கிணத்துக்கடவு
நத்தம்
திருச்சி மேற்கு
தஞ்சாவூர்
போடி
ஸ்ரீவைகுண்டம்
ராதாபுரம் - கொளத்தூரில் தவெக முன்னிலை
- அதிமுக 16; தவெக 15; திமுக 8; சிபிஐ 1, காங்கிரஸ் 2, பாமக 1, அமமுக 1-ல் முன்னிலை
- வேடசந்தூர்: வீரா சாமிநாதன் (திமுக)- 3047; பரமசிவம் (அதிமுக) – 3117;நாகஜோதி (தவெக) -2064
- சைதாப்பேட்டை தொகுதி: முதல் சுற்று : முடிவு: திமுக 2337 ; அதிமுக 848 ;தவெக 4334
- ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் முன்னிலை
- ராமநாதபுரத்தில் பாஜக முன்னிலை
- அதிமுக 11; தவெக 9; திமுக 5; சிபிஐ 1, காங்கிரஸ் 2, பாமக 1, பாஜக 1-ல் முன்னிலை
- அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
- சென்னையில் 15 தொகுதிகளில் தவெக முன்னிலை
- திருவொற்றியூர், எழும்பூரில் தவெக முன்னிலை
- தருமபுரியில் சவுமியா அன்புமணி முன்னிலை
- அதிமுக 9; தவெக 5; திமுக 3; சிபிஐ 1, காங்கிரஸ் 1, பாமக 1-ல் முன்னிலை
- அதிமுக 7; தவெக 4; திமுக 3; சிபிஐ 1 -ல் முன்னிலை
- ராதாபுரம் தொகுதியில் தவெக முன்னிலை
- தாராபுரம், கவுண்டம்பாளையத்தில் அதிமுக முன்னிலை
- அதிமுக 3; தவெக 2; திமுக 1- சிபிஐ1- ல் முன்னிலை
- திருத்துறைப்பூண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை
- ஸ்ரீ வைகுண்டம், திருச்சி மேற்கில் தவெக முன்னிலை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியில் முன்னிலை
- தவெக 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது- தேர்தல் ஆணையம்
- கோவை வடக்கில் பாஜக வானதி சீனிவாசன் பின்னடைவு
- ஜோலார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி முன்னிலை வகிக்கிறார்.
- காரைக்குடியில் சீமான் 4-வது இடத்தில் பின் தங்கி உள்ளார்.
- திமுக 58; தவெக 30; அதிமுக 14 இடங்களில் முன்னிலை
- கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்
- அவிநாசியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பின்னடைவு
- வேடசந்தூரில் திமுக வேட்பாளர் வீரா சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார்
- உத்திரமேரூரில் பாமக, மொடக்குறிச்சியில் தவெக முன்னிலை
- காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்து வருகிறார்
- கலசப்பாக்கத்தில் அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் உள்ளார்.
- மதுரை கிழக்கில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் உள்ளார்
- திண்டுக்கல் தொகுதியில் அதிமுக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பின்னடைவு
- தாம்பரம் சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை
- கிணத்துக்கடவு, சூலூர் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்
- தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முன்னிலை
- வில்லிவாக்கத்தில் தவெக ஆதவ் அர்ஜூனா பின்னடைவு
- சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
- நன்னிலத்தில் எஸ்டிபிஐ முபாரக் முன்னிலை
- தி.நகரில் தவெக புஸ்ஸி ஆனந்த் முன்னிலை
- கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை
- எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை
- திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை
- திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை
- திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து பின்னடைவு- திமுகவின் இனிகோ இருதயராஜ் முன்னிலை
- மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலை
- முழுமையான சோதனை செய்து முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கும் அதிகாரிகள் காலை உணவுக்கான பணம் பெற்றுக் கொண்டு சரியாக உணவு வழங்கவில்லை எனக் கூறி கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
- தபால் வாக்குகளில் திமுக 67; அதிமுக 9; தவெக 2-ல் முன்னிலை
- ஆத்தூர், ஒட்டன்சத்திரத்தில் ஐ.பெரியசாமி, அர சக்கரபாணி முன்னிலை
- திண்டுக்கல்லில் ஐபி செந்தில்குமார் முன்னிலை
- திருமங்கல்த்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பின்னடைவு
- திருச்சி கிழக்கில் விஜய் தொடர்ந்து பின்னடைவு
- தபால் வாக்குகளில் திமுக 46; அதிமுக 13; தவெக 2-ல் முன்னிலை
- தபால் வாக்குகளில் பெரம்பூரில் முன்னிலை வகிக்கும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
- தபால் வாக்குகளில் திமுக 38; அதிமுக 13; தவெக 3-ல் முன்னிலை
- தபால் வாக்குகளில் திமுக 31; அதிமுக 10; தவெக 3-ல் முன்னிலை
- திமுக 27; அதிமுக 9; தவெக 3-ல் முன்னிலை
- தபால் வாக்குகளில் திமுக 27; அதிமுக 7; தவெக 2-ல் முன்னிலை
- கொளத்தூரில் தபால் வாக்குகளில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை
- தபால் வாக்குகளில் திமுக 21; அதிமுக 7; தவெக 1-ல் முன்னிலை
- நாகை தொகுதியில் ஜவாஹிருல்லா முன்னிலை
- பெரம்பூர் தொகுதியில் 75 தபால் வாக்குகளுடன் தவெக தலைவர் விஜய் முன்னிலை
- தபால் வாக்குகளில் திமுக 17 இடங்களில் முன்னிலை; அதிமுக 6; தவெக 1 முன்னிலை
- தபால் வாக்குகளில் திமுக 9 ; அதிமுக 3 ; தவெக 1 முன்னிலை
- 6 லட்சம் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
- தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
- 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
- வாக்குகள் எண்ணும் பணி சற்று நேரத்தில் தொடங்குகிறது
- வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்றுகளாக எண்ணப்படும் விவரம்






- தமிழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் விவரம்






- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமது எக்ஸ் பக்கத்தில், ”மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கைக்காக கிளம்பி கொண்டிருக்கிறேன்…. அரசியலில் எனது பல ஆண்டுகால போராட்டத்திற்கு இன்று ஒரு பதில் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்… ஆளுநராக இருந்து இதற்கு ஏன் போட்டி போடுகிறார்கள்? பதவி ஆசை என்றனர் சிலர்.. பரிகசிப்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என் கவலை எல்லாம் பரிதவிப்பவர்களை பற்றியே.. ஆம் நான் போட்டி போட்டது பதவிக்கு ஆசைப்பட்டு அல்ல பரிதவிப்பவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிக்கு ஆசைப்பட்டு! சட்டமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் மகளின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே… தமிழ் மண்ணின் குரலாக மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் பெண்ணின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்… இறைவன் வெற்றியைத் தந்து அருள் புரிவான் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் ‘மாற்றத்திற்கான புயல்’ நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு ‘தேர்தல் முடிவுகள்’ எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது! தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்- தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவையில் தவெக தலைவர் விஜய்யின் தோழி நடிகை திரிஷா பங்கேற்பு.
- 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணியில் 10,545 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- பிரேமலதா- விருத்தாசலம்; விஜய பிரபாகர்- விருதுநகர்; தமிழிசை சவுந்தரராஜன்- மயிலாப்பூர்; வானதி சீனிவாசன்- கோவை வடக்கு; நயினார் நாகேந்திரன்- சாத்தூர்; சீமான்- காரைக்குடி; செல்வப்பெருந்தகை- ஸ்ரீபெரும்புதூர்; எல். முருகன்- அவிநாசி; ஜவாஹிருல்லா- நாகை; முபாரக்- நன்னிலம்; சவுமியா அன்புமணி- தருமபுரி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.
- திமுகவில் மு.க. ஸ்டாலின்- கொளத்தூர் ; உதயநிதி ஸ்டாலின்-சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி;துரைமுருகன்- காட்பாடி; கே.என். நேரு- திருச்சி (மேற்கு); ஐ. பெரியசாமி- ஆத்தூர்; எ.வ. வேலு- திருவண்ணாமலை; எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்-குறிஞ்சிப்பாடி; கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்-அருப்புக்கோட்டை; தங்கம் தென்னரசு-திருச்சுழி;எஸ். ரகுபதி-திருமயம்;சு. முத்துசாமி- ஈரோடு (மேற்கு); கே.ஆர். பெரியகருப்பன்-திருப்பத்தூர்; தா. மோ. அன்பரசன்-ஆலந்தூர்; மு.பெ. சாமிநாதன்- காங்கேயம்- பி. கீதா ஜீவன்- தூத்துக்குடி; அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்- திருச்செந்தூர்; ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்-முதுகுளத்தூர்; ஆர். ராஜேந்திரன்- சேலம் (வடக்கு); அர. சக்கரபாணி-ஒட்டன்சத்திரம்; ஆர். காந்தி-ராணிப்பேட்டை; மா. சுப்பிரமணியன்- சைதாப்பேட்டை; பி. மூர்த்தி-மதுரை (கிழக்கு); எஸ்.எஸ். சிவசங்கர்-குன்னம்; பி.கே. சேகர்பாபு-துறைமுகம்; கோவி. செழியன்-திருவிடைமருதூர்; பழனிவேல் தியாகராஜன்-மதுரை (மத்தி) ; எஸ்.எம். நாசர்-ஆவடி; அன்பில் மகேஸ் பொய்யாமொழி-திருவெறும்பூர்;சிவ. வீ. மெய்யநாதன்- ஆலங்குடி; சி. வி. கணேசன்-திட்டக்குடி; டி. ஆர். பி. ராஜா-மன்னார்குடி; மதிவேந்தன்-ராசிபுரம்; வி. செந்தில் பாலாஜி-கோவை (தெற்கு); ஓ. பன்னீர்செல்வம்-போடிநாயக்கனூர்; வைத்திலிங்கம்- ஒரத்தநாடு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்.
- அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி- எடப்பாடி; பி. பெஞ்சமின்- மதுரவாயல்; டி. ஜெயக்குமார்- ராயபுரம்; பி. வளர்மதி- ஆயிரம் விளக்கு; கோகுல இந்திரா- அண்ணா நகர்; கே. சி. வீரமணி- ஜோலார்பேட்டை; கே. பி. முனுசாமி- வேப்பனஹள்ளி; பி. பாலகிருஷ்ண ரெட்டி- ஓசூர்; கே. பி. அன்பழகன்- பாலக்கோடு; அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி- கலசபாக்கம்; சி. வெ. சண்முகம்- மயிலம்; பி. தங்கமணி- குமாரபாளையம்; கே. சி. கருப்பண்ணன்- பவானி; எம். எஸ். எம். ஆனந்தன்- திருப்பூர் வடக்கு; எஸ். பி. வேலுமணி- தொண்டாமுத்தூர்; பொள்ளாச்சி வி. ஜெயராமன்- பொள்ளாச்சி; உடுமலை கே. ராதாகிருஷ்ணன்- உடுமலைப்பேட்டை; நத்தம் ஆர். விஸ்வநாதன்- நத்தம்; திண்டுக்கல் சி. சீனிவாசன்- திண்டுக்கல்; எம். ஆர். விஜயபாஸ்கர்- கரூர்; எம். சி. சம்பத்- கடலூர்; ஓ. எஸ். மணியன்- வேதாரண்யம்; ஆர். காமராஜ்- நன்னிலம்; சி. விஜயபாஸ்கர்- விராலிமலை; செல்லூர் கே. ராஜூ- மதுரை மேற்கு; ஆர். பி. உதயகுமார்- திருமங்கலம்; கே. டி. ராஜேந்திர பாலாஜி- சிவகாசி; எஸ். பி. சண்முகநாதன்- ஸ்ரீவைகுண்டம்; கடம்பூர் ராஜூ- கோவில்பட்டி; தளவாய்சுந்தரம்- கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்.
- அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த பாதுகாப்பு
- திமுக 164; அதிமுக 167; தவெக 233; நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஐ 5, சிபிஎம் 5, மதிமுக 4, முஸ்லிம் லீக் 2, மமக 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் இம்முறை 4 முனைப் போட்டியை எதிர்கொண்டது சட்டசபை தேர்தல்
- வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் நுழைவதற்கு இந்த முறை QR குறியீடு (QR code-based entry system) முறையை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது.
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ”எங்கள் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்; தமிழகத்தில் வரலாறு படைக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அனைத்து கருத்துக்கணிப்புகளையும் நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்பட்டதை விட எங்கள் நிலை மிகவும் வலுவாக இருக்கும். நாங்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு செய்த செயல்பாடுகளும், வளர்ச்சியுமே மக்களிடம் எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும்… மக்கள் ஏற்கனவே எங்களுக்கு வாக்களித்துவிட்டார்கள்” என்றார்.
- 2021 சட்டசபை தேர்தலில் திமுக மொத்தம் 188 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மொத்தம் 1,74,30,179 வாக்குகள் அதாவது 37.7% வாக்குகளைப் பெற்றது திமுக.
- 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக மொத்தம் 191 இடங்களில் போட்டியிட்டு 66 இடங்களைக் கைப்பற்றியது. மொத்தம் 1,53,91,055 வாக்குகளைப் பெற்றது அதிமுக. அதாவது 33.29% வாக்குகளைப் பெற்றது அதிமுக.
- அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வென்றது. பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வென்றது. அமமுக கூட்டணியில் 60 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
- திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தலா 6 இடங்களில் போட்டியிட்டு தலா 2 இடங்களிலும் வென்றனர். திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விசிக 4 இடங்களைக் கைப்பற்றியது. மதிமுக உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறையும் போட்டியிட்டது.
- தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடி; இவர்களில் 4.88 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். மொத்தம் 85.10% வாக்குகள் பதிவாகின.
- தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
- காலை 6 மணி முதல் வாக்கு எண்ணும் பணியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர்; எடப்பாடி பழனிசாமி எடப்பாடி; விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர், சீமான் காரைக்குடி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்
- திமுகவின் 32 அமைச்சர்கள் மீண்டும் களம் காண்கின்றனர்
- காலை 8 மணிக்கு தபால் வாக்குகள்; காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
- வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
- தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது
