Tamil Nadu Election 2026: “வதந்தியைப் பரப்ப வேண்டாம்” – அஜித் மாற்றம் குறித்து பேசினாரா ? மேலாளர் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Ajith

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித் குமார் வருகை தந்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே, முதல் ஆளாகத் தனது ஜனநாயகக் கடமையை அவர் பதிவு செய்தார்.

ADVERTISEMENT

வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம், “தமிழகத்திற்கு மாற்றம் தேவைப்படுகிறதா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர் “மாற்றம் தேவையில்லை” எனப் பதிலளித்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவின.

மேலாளர் விளக்கம்:
இந்தத் தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்:

ADVERTISEMENT

“அஜித்குமார் ‘மாற்றம் தேவை’ என்றோ அல்லது ‘தேவையில்லை’ என்றோ செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இணையத்தில் பகிரப்படும் அந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:

ADVERTISEMENT

இதற்கிடையில், சென்னையில் வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “அஜித் மாற்றம் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறாரே, அது பற்றிய உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டதற்கு, “அது நல்ல விஷயம் தானே” என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share