Tamil Nadu Election 2026: மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய், சீமான் உள்ளிட்ட தலைவர்களின் தொகுதி நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Regulations Coming into Force Following the Conclusion of Election Campaigning

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை (ஏப்ரல் 23) 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் பின்வருமாறு:

ADVERTISEMENT

எடப்பாடியில் அதிகபட்ச வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரப்படி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அதிகபட்சமாக 19.07% வாக்குகள் பதிவாகியுள்ளன.

விஜய் போட்டியிடும் தொகுதிகள்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் 17.72% வாக்குகளும், பெரம்பூர் தொகுதியில் 16.92% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

கொளத்தூர் நிலவரம்: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் 17.51% வாக்குகள் பதிவாகி சராசரியான வேகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காரைக்குடி நிலவரம்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 15.74% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share