Tamil Nadu Election 2026: ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய தவெக தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, சிவகார்த்திகேயன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Election

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் அகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அவர் தனது வீட்டிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டார். விஜய் வாக்குச்சாவடிக்கு வந்தபோது அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல், விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன்,
“நீங்கள் அரசியலில் தலையிடவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும் என்று புரட்சியாளர் லெனின் கூறியுள்ளார். அப்படியானால், நாம் அரசியலில் தலையிடுவதற்கான மிகப் பெரிய ஆயுதம் வாக்களிப்பது தான். அது ஜனநாயகக் கடமை மற்றும் பொறுப்பு. நான் வாக்களித்து விட்டேன். எனது ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இன்று ஓய்வு நாள் என்று நினைக்காமல், உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக கருதுங்கள். மற்ற நாட்களை விட இன்றைய நாள் முக்கியமானது. நீங்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர்,
“நான் எப்போதும் காலையிலேயே வந்து வாக்களித்து விடுவேன். ஒரே ஒரு முறை மட்டும் படப்பிடிப்பு காரணமாக தாமதமானது. வாக்கு என்பது நாம் அனைவரும் சமமானவர்கள் என்பதற்கான அடையாளம். இங்கு ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லை. பணக்காரர்களுக்கு இரண்டு ஓட்டு, ஏழைகளுக்கு ஒரு ஓட்டு என்பதில்லை. எல்லோருக்கும் ஒரே ஒரு ஓட்டு தான். அதுவே நமது பலம்.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள தேர்தல் இது என்பதால், இந்தத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள தேர்தல் இது என்பதால், இந்தத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share