Tamil Nadu Election 2026: வாக்குச் சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது – பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார்

By Pandeeswari Gurusamy

|

Published on 23 Apr 2026, 6:28 AM

election

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளில் காலை 6 மணியளவில் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 5.73 கோடி வாக்காளர்கள் இன்று (ஏப்ரல் 23) தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். இதற்காகத் தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அமைனத்து வாக்குச்சாவடி மையங்களிலம் சிசிடிவி கேமராகள் பொருத்தப்பட்டுள்ளன.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும், தமிழக சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், தேர்தல் பணிகளில் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 295 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 23,000 ராணுவப் படையினரும் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 90 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவத்தினரும், 24000 போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடைந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் விவிபேட் இயந்திரத்தில் சரியாக பதிவாகிறதா? என சரிபார்க்க இந்த மாதிரி வாக்குப் பதிவு தொடங்கி உள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel