கரூரில் வாக்காளர்களுக்கு வெள்ளி காசு, தங்க காசு.. ரூ.356.5 கோடியை வாரி வழங்கிய அதிமுக, திமுக

Published On:

| By Mathi

Karur Coins

கரூர் சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஏற்கனவே பெரும் தொகை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டுள்ளன.

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்; திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜியின் உறவினரான ஆசி தியாகராஜன் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

கரூர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு அதிமுக சார்பில் ரூ3,000 கொடுக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக திமுக தரப்பில் ஒரு ஓட்டுக்கு டபுள் மடங்காக ரூ6,000 கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுகவினர் இன்று மாலை 1 ஒரு ஓட்டுக்கு 4 கிராம் வெள்ளி காசு கொடுத்துள்ளனர். 1 கிராம் வெள்ளியின் இன்றைய மதிப்பு ரூ 275. 4 கிராம் வெள்ளியின் இன்றைய மதிப்பு ரூ1,100.

ADVERTISEMENT

இதற்கு போட்டியாக திமுகவினர் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் ஒரு ஓட்டுக்கு அரை கிராம் தங்க காசு வழங்கப்பட்டுள்ளது. 1 கிராம் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ14,250. அரை கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ7,125.

கரூர் தொகுதியில் அதிமுகவினர் இதுவரை ரொக்கம் ரூ3,000, ரூ.1,100 மதிப்பிலான வெள்ளி காசு கொடுத்துள்ளது. அதாவது கரூரில் ஒரு வாக்காளர்களுக்கு அதிமுக ரூ4,100 வீதம் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.82 கோடி கொடுத்துள்ளது.

ADVERTISEMENT

திமுக தரப்பில் இதுவரை ரொக்கம் ரூ6,000 , ரூ. 7,125 மதிப்பிலான அரை கிராம் தங்க காசு என 1 ஓட்டுக்கு ரூ13,725 கொடுத்துள்ளது.

அதாவது சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு திமுக தரப்பில் ரூ274.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர் தொகுதியில் மட்டும் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு அதிமுகவும் திமுகவும் இதுவரை சுமார் ரூ356.5 கோடி பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share