Tamil Nadu Assembly Election 2026 : தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு

Published On:

| By Pandeeswari Gurusamy

election

தமிழகத்தில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.

ADVERTISEMENT

தொடர்ச்சியாக தமிழக முதல்வர் ஸ்டாலின்,நடிகர் விஜய், அரசியல்வாதி எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில், காலை 9 மணி நிலவரப்படி இதுவரை 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ள நிலையில், தற்போது வரை 1,01,44,028 வாக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

இதில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 20.38 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்கு பதிவு தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில் ஆத்தூர், அவிநாசி, பவானி, ஈரோடு கிழக்கு,குமாரபாளையம், காங்கேயம், கவுண்டம்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட 13 தொகுதிகளில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது.

முன்னதாக, கொரோனா பாதிப்புகளுக்கு இடையே நடைபெற்ற கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவான நிலையில், அதன் பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தலில் 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு நிலவரம்

ஈரோடு – 19.55%
கோவை – 18.45%
காஞ்சிபுரம் – 18.78%
நாமக்கல் – 19.83%
திருப்பூர் – 20.83%
திண்டுக்கல் – 18.28%
கரூர் – 18.78%
காஞ்சிபுரம் 18.78
கன்னியாகுமரி – 17.19%
விருதுநகர் – 18.02%
விழுப்புரம் – 17.76%
கிருஷ்ணகிரி – 16.79%
மதுரை – 17.32%
மயிலாடுதுறை – 16.43%
நாகை – 17.86%
பெரம்பலூர் – 17.68%
வேலுர் 17.96
திருவண்ணாமலை 17.80
புதுக்கோட்டை -16.97%
ராமநாதபுரம் – 15.54%
ராணிப்பேட்டை – 18.09%
சேலம் – 19.46%

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share