Tamil Nadu Election 2026: 85 சதவிகிதத்தை தாண்டி வரலாறு படைக்குமா வாக்குப்பதிவு?

Published On:

| By Pandeeswari Gurusamy

Election

தமிழகம் முழுவதும் இனறு (ஏப்ரல் 23) முற்பகல் 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 23) நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். SIR நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்த தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு நடிகர் அஜித் தமிழகத்தில் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ச்சியாக இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், முற்பகல் 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரை 2,15,40,712 பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் இன்று தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 முதல் 95 சதவிகித வாக்குகள் பதிவாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகி இருந்தது.

அதிக வாக்குகள் பதிவாகி உள்ள மாவட்டங்கள்

திருப்பூர் – 42.45%
நாமக்கல் – 41.41%
ஈரோடு – 41.00%
சேலம் – 40.56%
கரூர் – 39.70%
அரியலூர் – 36.11%
செங்கல்பட்டு – 37.17%
சென்னை – 35.47%
கோவை – 38.62%
கடலூர் – 36.30%
தருமபுரி – 38.28%
திருச்சி – 37.97%
ராணிப்பேட்டை – 38.69%
நாகை – 37.56%
ராமநாதபுரம் – 33.49%
திருநெல்வேலி – 32.95%
வேலூர் – 37.99%

ADVERTISEMENT

1952-ம் ஆண்டு முதல் இதுவரை பதிவான வாக்குகள் சதவீதம்

தேர்தல் ஆண்டுமொத்த வாக்காளர்கள்வாக்குப்பதிவு சதவீதம் (%)
19521,99,58,66956.41%
19571,75,14,99346.84%
19621,86,10,72170.65%
19671,91,90,99276.57%
19712,30,64,38571.82%
19772,71,80,87361.58%
19802,81,73,49870.74%
19843,09,45,10373.47%
19893,98,50,38669.69%
19913,99,09,76763.92%
19964,24,84,65366.95%
20014,74,94,42359.07%
20064,66,02,57570.82%
20114,71,16,21778.12%
20165,81,95,72874.81%
20216,29,35,73672.81%
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share