வரும் 2030க்குள் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.
அதனைதொடர்ந்து இன்று காலை 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார்.
சட்டமன்றத்தில் திருவள்ளுவரின்,
’காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்’
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார்.
வானவில்லைப் போன்று 7 அம்சங்கள் அடிப்படையில் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ள பட்ஜெட்டை வாசித்தார்.
அதன்படி,
தமிழ்நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு,
தமிழ்நாட்டில் மின் நூலகம் அமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு,
தோடர் உள்ளிட்ட பழங்குடி மக்களின் இன வரைவியல் பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு,
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு,
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு,
2030க்குள் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளின் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கீடு,
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு,
ஊரகப் பகுதிகளில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க ரூ. 365 கோடி ஒதுக்கீடு,
தமிழ்நாட்டில் 5000 நீர்நிலைகளை சீரமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு,
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு,
சாலை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு,
மாநகராட்சிகளின் புதிய விரிவாக்கப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு,
79 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக ரூ. 3300 கோடி நிதி ஒதுக்கீடு,
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,482 கிராமங்களுக்கு ரூ. 1147 கோடி ஒதுக்கீடு,
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு நிதி ரூ.27,922 கோடி ஒதுக்கீடு.
கோவளம், பெசண்ட் நகர், எண்ணூரை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு,
வடசென்னை வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 3000 கோடி ஒதுக்கீடு,
வடசென்னையில் கழிவுநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 946 கோடி ஒதுக்கீடு,
2 ஆண்டுகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும்.
அடையாறு ஆற்றில் 70 கி.மீ தொலைவிற்கு கழிவுநீர் வெளித்தடம் அமைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் புதிதாக 10000 சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா