தமன்னாவின் சிவசக்தி அவதாரம்..! ஒடேலா – 2 வீடியோ இதோ..!

Published On:

| By Selvam

கடந்த 2022ல்  வெளியாகி சூப்பர் ஹிட்டான “ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்” படத்தின் இரண்டாம் பாகமான ‘ஒடேலா – 2’ படம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகை தமன்னா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா அவர்கள் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

ADVERTISEMENT

மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஹெபா பட்டேல், வசிஷ்டா என். சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி, பூஜா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். “காந்தாரா” பட புகழ் அஜனேஷ் லோக்நாத் ஒடேலா 2 படத்திற்கு இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

சில மாதங்களுக்கு முன் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஒடேலா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் சிவசக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு கையில் கோலும் மற்றொரு கையில் உடுக்கையுமாக வித்தியாசமான தோற்றத்தில் நடிகை தமன்னாவின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) ஒடேலா 2 படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகை தமன்னா சிவசக்தி கெட்டப்பிற்காக கைகளில் சூலாயுதத்தின் டாட்டூ வரைந்து கொண்டு, நெற்றியில் சந்தன பட்டை, குங்கும திலகம் பூசிக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கேமராவின் முன்பு தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் ஒடேலா 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்த தமன்னாவிற்கு மீண்டும் தமிழ் படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்க தொடங்கியுள்ளது. சுந்தர்.C இயக்கத்தில் தமன்னா நடிப்பில் அரண்மனை 4 படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Odela 2 Teaser | Tamannaah Bhatia | Sampath Nandi | Ajaneesh Loknath | Ashok Teja |TFPC

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை ரோல்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… ஸ்டாலின் மனசில் இருப்பது என்ன?

அது என்ன வெயில் ஆம்லேட்? – அப்டேட் குமாரு

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்: 60.96% வாக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share