நெய்வேலி பகுதி விவாசாய மக்கள் கொடுத்த நிலத்தில் அமைக்கப்பட்டதுதான் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன். உள்ளூர் தன்மையோடு இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் பெயரில் உள்ள உள்ளூர் அடையாளத்தை அகற்ற மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.இதுவரை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி) என்ற பெயரை, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்ற உள்ளதாக மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசு நெய்வேலி பழுப்பு நிலக்கரி என்ற பெயரை மாற்றக்கூடாது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து என்.எல்.சி ஊழியர்கள் கூறியதாவது, ‘‘1935ம் ஆண்டு, நெய்வேலியில் ஜம்புலிங்க முதலியார் என்பவர் கிணறு வெட்டியபோது பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அருகில் இருந்த 35 கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு உருவானதுதான் இந்த என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம். கடந்தாண்டு மட்டும் ரூ.1579 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நெய்வேலி என்ற பெயரை மாற்றவில்லை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்பதை இந்தியா என்.எல்.சி லிமிடெட் என்று பெயர் மாற்றம்செய்ய முடிவெடுக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இதில் தவறு ஒன்றும் இல்லை’’ என்றனர்.










