இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்றாவது நாளாக தொடர்ந்து உயர்வுடன் முடிவடைந்தது. ஜுலை 16 செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்வுடனும், நிஃப்டி 24,600க்கு மேல் உயர்ந்து முடிந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பந்தன் வங்கி நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரத்தில் கோடக் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட், என்டிபிசி, எல்&டி, பவர் கிரிட், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களிடையே அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டை கணக்கிடுகையில் 18.68% உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.1,644 கோடியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் காலாண்டில் ரூ.1,988 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 1.50 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை
ரூ,9,820.85 ரூபாயாக முடிந்தது.
ஹரியானா ஷிப் பிரேக்கர்ஸ் நிறுவன பங்கு தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 10% உயர்ந்து 222.90 ஆக புதிய உச்சத்தை அடைந்தது.
2025 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் உதய்பூர் சிமெண்ட் நிறுவனம் ரூ.10.3 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் உதய்பூர் சிமென்ட் ஒர்க்ஸ் பங்கு 5.06 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.42 ஆக குறைந்தது.
ஜாம்ஷெட்பூரில் உள்ள சென்டர் பாயிண்ட் பகுதியில் லெமன் ட்ரீ ஹோட்டல் நிறுவனம் தனது முதல் ஓட்டலை தொடங்கியதாக அறிவித்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு ஏற்றம் கண்டது.
லெமன் ட்ரீ ஹோட்டல்களின் பங்கு செவ்வாய்க்கிழமை 1.5 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கு ஒன்றுக்கு ரூ.148.80 ஆக உயர்ந்தது.
லெமன் ட்ரீ ஹோட்டல் நிறுவனம் LTHL Aurika Hotels & Resorts, Lemon Tree Premier, Lemon Tree Hotels, Red Fox Hotels by Lemon Tree Hotels, Keys Prima by Lemon Tree Hotels, Keys Select by Lemon Tree Hotels, and Keys Lite by Lemon Tree Hotels என மேற்கண்ட ஏழு பிராண்டுகளை உள்ளடக்கிய பலதரப்பட்ட விருந்தினர்களை கவர்ந்திழுக்கும் வகையில் விடுதிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், 2024-25 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டிற்கான முடிவுகளை ஜுலை 18 வியாழன் அன்று அறிவிக்க உள்ளது.
சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.19.82 கோடி அபராதம் விதித்துள்ளது மகாராஷ்டிராவின் ராய்காட்டில் உள்ள சுங்க ஆணையர் அலுவலகம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் பங்கு பிஎஸ்இயில் ரூ.1.24 உயர்ந்து ரூ.55.87 இல் முடிந்தது.
சிரியஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கூட்டு முயற்சியாக கோர்ட்ஜில் நிறுவனத்தின் 77.5% பங்குகளை வாங்கவுள்ளதாக தெரிவித்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு NSE இல் 0.52% உயர்ந்து 3,106.50 ஆக இருந்தது.
மொகரம் பண்டிகை காரணமாக உள்நாட்டு பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஜூலை 17 புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தில் ராஜூ வைத்த டிமாண்ட்: இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைந்த ஷங்கர்