லைகா- ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில், ஜூலை 12 -ஆம் தேதி வெளியான படம் இந்தியன்-2. கமல்ஹாசன், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, பாபி சிம்ஹா, மனோபாலா, விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
இந்தியன் படம் போன்று அதன் இரண்டாம் பாகம் இல்லை என்கிற விமர்சனம் சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வந்தது. இந்தநிலையில், படத்தின் மூன்று மணி நேர காட்சிகள் பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்பட்டது.
இருந்த போதிலும் முதல் மூன்று நாட்களில் சுமார் ரூ.110 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ள இந்தியன்-2, படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும் என்று தெலுங்கில் இப்படத்தை வெளியிட்டிருக்கும் தில் ராஜு தரப்பில் இருந்து இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. படம்பார்த்தவர்களும் இதே கருத்தை கூறி வந்தனர்.
அதனால் படம் ஓடும் நேரத்தில் 11 நிமிடங்கள் 51 விநாடிகள் படத்தின் நீளத்தை குறைத்துள்ள புதிய பதிப்பு, நேற்று (ஜூலை 16) முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கவிஞர் வீட்டில் கைவரிசை: மகாராஷ்ராவில் விநோத சம்பவம்!
அரசு பங்களாவில் குடியிருக்கும் முன்னாள் எம்.பி-க்கள்: உடனடியாக காலி செய்ய உத்தரவு!
பியூட்டி டிப்ஸ்: வழுக்கைத் தலைமுடி வளர… சின்ன வெங்காயம் உதவுமா?
டாப் 10 நியூஸ்: மொஹரம் பண்டிகை முதல் தங்கலான் பாடல் ரிலீஸ் வரை!