2026 சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது தேர்தல்களை நடத்துவதற்கும், தேர்தல் தொடர்பான கடினமான பணிகளை மேற்கொள்வதற்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கும் நடைமுறைப்படி, தமிழ்நாடு 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக பணியாற்றிய நிரந்தர, தற்காலிக பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்தது.
அதன்படி தேர்தல் பணிகளை மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள், பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சம் 45 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
மாவட்ட தேர்தல் அலுவலகப் பிரிவில் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி/நகராட்சி ஆணையர்கள், பறக்கும் படை/வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கு குழு, நடத்தை விதிமுறை குழு, உதவி செலவின பார்வையாளர்கள், கண்காணிப்பு குழு, மண்டல உதவியாளர்கள் ஆகியோருக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாயும்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், நோடல் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆட்சியர் அலுவலகம் வருவாய் பிரிவில் தேர்தல் பணியாற்றிய பிற பிரிவினருக்கு அதிகபட்சமாக 20000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதற்காக தமிழக அரசு 198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது










