பெரியார் அறிவுலக நூல்கள் குளறுபடி தொடர்பான விசாரணைக்கு திமுக தயாராக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, பெரியார் அறிவுலக நூலகத்துக்காக கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு நூல்களும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆளும் கட்சியினர் திமுக மீதும், திமுகவினர் ஆளும் கட்சியின் மீதும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ” தமிழக வெற்றிக் கழகத்தினர் எல்லாவற்றுக்கும் காரணம் திமுக தான் என்று கூறுகின்றனர்.
சூரியன் உதிப்பதற்கும் திமுக தான் காரணம் என்று கூறுவார்கள். இப்படி கூறுவது மட்டும் தான் அவர்களிடம் இருக்கும் ஒரே பதில்.
நாங்கள் முறையான விசாரணைக்கு தயாராக இருக்கிறோம். திமுக ஆட்சியில் இருந்தபோது இந்த குளறுபடி நடந்திருக்காது என்பதில் நான் நிச்சயம் உறுதியாக இருக்கிறேன். நூல்களின் பெயர்களையும், அவற்றை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
எனவே, இந்த முழுச் சம்பவமும் எந்த ஆட்சியின் காலத்தில் நடந்தது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆறுதல் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.










