VIDEO: ‘பெரியார் அறிவுலகம்’ புத்தக கொள்முதல் ஊழல்: லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக புகார்

By Mathi

|

Published on 7 Nov 2026, 9:28 PM

Periyar Arivulagam-DMK

கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் மனுவில் பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
  2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
  3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
  4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
  5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
  6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
  7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
  8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? இவ்வாறு திமுகவின் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் புகார் மனு

வீடியோ

Paranthaman Speech | பெரிய தப்பு பண்ணிருக்கீங்க... ஆதாரத்துடன் வெளுத்த பரந்தாமன் | TVK | DMK |

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel